• May 09 2024

யாழில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு - அனைத்து மதங்களுக்கும் தனித்துவமான சுதந்திரம்..! வடக்கு ஆளுநர் உறுதி samugammedia

Chithra / May 22nd 2023, 1:42 pm
image

Advertisement

வடமாகாணத்திலுள்ள அனைத்து மதங்களும் தமது தனித்துவமான மத உரிமைகள் மற்றும் அனுஸ்டானங்களை மேற்கொள்வதற்கான சுதந்திரத்தை வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதுஎன வடமாகாண ஆளுநர் சாள்ஸ் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக இன்று கடமைகளை பெறுபேற்ற பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

வடமாகாணத்திலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் எதிர்வரும் தினங்களில் கலந்துரையாடி விபரங்களை ஆராயவுள்ளேன்.

வடமாகாணத்திலுள்ள அனைத்து மதங்களும் தமது தனித்துவமான மத உரிமைகள் மற்றும் அனுஸ்டானங்களை மேற்கொள்வதற்கான சுதந்திரத்தை வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

இதேவேளை யாழ்.மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை நிலவுகின்றது.  நான் கூட தனிப்பட்ட ரீதியாக இங்கு குடிநீர் பிரச்சினையை உணர்ந்துள்ளேன். எனவே நிச்சயமாக இதனைத் தீர்க்க உரிய நடவடிக்கைகளை  மேற்கொள்ளவுள்ளேன்.

இந்த மாகாணத்தினுள் நுழைந்ததிலிருந்து ஊடகத்துறையினர்  மிகுந்த ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். மாதத்தில் ஒரு தடவை மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஊடகவியளாளர்களைச் சந்திக்கவுள்ளேன்.

ஏனையவர்கள் கூறும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஊடகங்களில் பிரசுரிக்காமல் நேரடியாக கலந்துரையாடி விடயங்களைப் பிரசுரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். - என்றார்

யாழில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு - அனைத்து மதங்களுக்கும் தனித்துவமான சுதந்திரம். வடக்கு ஆளுநர் உறுதி samugammedia வடமாகாணத்திலுள்ள அனைத்து மதங்களும் தமது தனித்துவமான மத உரிமைகள் மற்றும் அனுஸ்டானங்களை மேற்கொள்வதற்கான சுதந்திரத்தை வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதுஎன வடமாகாண ஆளுநர் சாள்ஸ் தெரிவித்தார்.வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக இன்று கடமைகளை பெறுபேற்ற பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.வடமாகாணத்திலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் எதிர்வரும் தினங்களில் கலந்துரையாடி விபரங்களை ஆராயவுள்ளேன்.வடமாகாணத்திலுள்ள அனைத்து மதங்களும் தமது தனித்துவமான மத உரிமைகள் மற்றும் அனுஸ்டானங்களை மேற்கொள்வதற்கான சுதந்திரத்தை வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.இதேவேளை யாழ்.மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை நிலவுகின்றது.  நான் கூட தனிப்பட்ட ரீதியாக இங்கு குடிநீர் பிரச்சினையை உணர்ந்துள்ளேன். எனவே நிச்சயமாக இதனைத் தீர்க்க உரிய நடவடிக்கைகளை  மேற்கொள்ளவுள்ளேன்.இந்த மாகாணத்தினுள் நுழைந்ததிலிருந்து ஊடகத்துறையினர்  மிகுந்த ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். மாதத்தில் ஒரு தடவை மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஊடகவியளாளர்களைச் சந்திக்கவுள்ளேன்.ஏனையவர்கள் கூறும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஊடகங்களில் பிரசுரிக்காமல் நேரடியாக கலந்துரையாடி விடயங்களைப் பிரசுரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். - என்றார்

Advertisement

Advertisement

Advertisement