• Sep 21 2024

இந்தியாவை விட்டு ஓடும் பெரும் பணக்காரர்கள்- காரணம் என்ன? samugammedia

Tamil nila / Jun 14th 2023, 10:55 pm
image

Advertisement

இந்த ஆண்டு(2023) குறைந்த பட்சம் 6500 பணக்கார இந்தியர்கள் இந்தியாவை விட்டு வேறு நாடுகளுக்கு குடியேறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Henley நிறுவனம் வெளியிட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கை(Henley Private Wealth Migration Report )மூலம் இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அத்துடன் இந்தியாவில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் இந்திய குடியுரிமையை விட்டு வேறு நாடுகளுக்கு செல்வதற்கு வரிச் சலுகை, வர்த்தக வாய்ப்புகள், வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகள், பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் என காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகளவில் சொத்து மற்றும் முதலீடுகளின் நகர்வை ஆழ்ந்து கவனித்து அதுகுறித்து தொடர்ந்து ஆய்வு செய்யும் நிறுவனமாக Henley உள்ளது.

குறித்த  நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டும் பணக்காரர்கள் (HNI) 1 மில்லியன் டொலருக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்கள். 1 மில்லியன் டொலர் எனில் இந்திய ரூபாய் மதிப்பு படி 8.3 கோடி ரூபாய்.

Henley வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்த ஆண்டு சீனாவில் இருந்து 13500 பேரும், இந்தியாவில் இருந்து 6500 பேரும், பிரிட்டன் நாட்டில் இருந்து 3200 பேரும், ரஷ்யாவில் இருந்து 3000 பேரும் அவரவர் சொந்த நாட்டை விட்டு வெளியேற உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களை பொறுத்த வரையில் அதிகப்படியானோர் குடும்பத்துடன் செல்ல வேண்டும் என நினைக்கும் பகுதிகளில் டுபாய், சிங்கப்பூர் முதன்மையாக உள்ளது.

இந்த நாடுகளில் அளிக்கப்படும் கோல்டன் விசா, வரிச் சலுகைகள் இந்திய மக்களை அதிகளவில் ஈர்க்கிறது.

இந்தியாவில் தற்போது சுமார் 3,57,000 HNI-கள் உள்ளனர், இந்த எண்ணிக்கை 2031ல் சுமார் 80 சதவீதம் வரையில் உயர வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டு உள்ளது.  

இந்தியாவை விட்டு ஓடும் பெரும் பணக்காரர்கள்- காரணம் என்ன samugammedia இந்த ஆண்டு(2023) குறைந்த பட்சம் 6500 பணக்கார இந்தியர்கள் இந்தியாவை விட்டு வேறு நாடுகளுக்கு குடியேறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.Henley நிறுவனம் வெளியிட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கை(Henley Private Wealth Migration Report )மூலம் இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.அத்துடன் இந்தியாவில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் இந்திய குடியுரிமையை விட்டு வேறு நாடுகளுக்கு செல்வதற்கு வரிச் சலுகை, வர்த்தக வாய்ப்புகள், வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகள், பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் என காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.மேலும் உலகளவில் சொத்து மற்றும் முதலீடுகளின் நகர்வை ஆழ்ந்து கவனித்து அதுகுறித்து தொடர்ந்து ஆய்வு செய்யும் நிறுவனமாக Henley உள்ளது.குறித்த  நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டும் பணக்காரர்கள் (HNI) 1 மில்லியன் டொலருக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்கள். 1 மில்லியன் டொலர் எனில் இந்திய ரூபாய் மதிப்பு படி 8.3 கோடி ரூபாய்.Henley வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்த ஆண்டு சீனாவில் இருந்து 13500 பேரும், இந்தியாவில் இருந்து 6500 பேரும், பிரிட்டன் நாட்டில் இருந்து 3200 பேரும், ரஷ்யாவில் இருந்து 3000 பேரும் அவரவர் சொந்த நாட்டை விட்டு வெளியேற உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியர்களை பொறுத்த வரையில் அதிகப்படியானோர் குடும்பத்துடன் செல்ல வேண்டும் என நினைக்கும் பகுதிகளில் டுபாய், சிங்கப்பூர் முதன்மையாக உள்ளது.இந்த நாடுகளில் அளிக்கப்படும் கோல்டன் விசா, வரிச் சலுகைகள் இந்திய மக்களை அதிகளவில் ஈர்க்கிறது.இந்தியாவில் தற்போது சுமார் 3,57,000 HNI-கள் உள்ளனர், இந்த எண்ணிக்கை 2031ல் சுமார் 80 சதவீதம் வரையில் உயர வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டு உள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement