• Oct 28 2024

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழரசுக் கட்சி கோரிக்கை

Chithra / Aug 29th 2023, 4:54 pm
image

Advertisement

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளைய தினம் சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குமாறு தமிழரசுக்கட்சி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு இணைந்த வடகிழக்கில் வடக்கிலும் கிழக்கிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியத்தினை நேசிக்கும் மற்றும் காணாமல்போன உறவுகளுக்கு குரல்கொடுக்கும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா, இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் கி.சேயோன் ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.


வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழரசுக் கட்சி கோரிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளைய தினம் சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குமாறு தமிழரசுக்கட்சி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை கோரிக்கை விடுத்துள்ளது.சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு இணைந்த வடகிழக்கில் வடக்கிலும் கிழக்கிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியத்தினை நேசிக்கும் மற்றும் காணாமல்போன உறவுகளுக்கு குரல்கொடுக்கும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா, இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் கி.சேயோன் ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement