• Apr 26 2024

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு திராணி இல்லை! அருட்தந்தை மா.சத்திவேல்

Chithra / Jan 5th 2023, 10:44 am
image

Advertisement

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு தற்போது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அச்சநிலையை தோற்றுவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அருட்தந்தை மா.சத்திவேலும் இன்றையதினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இனப்பிரச்சனை தொடர்பான கலந்துரையாடல்களை மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்த வேண்டும் என்றும், ஆனால் அதற்கான திராணி கூட்டமைப்பிடம் இல்லை என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றையதினம் சம்பந்தனை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,

தனது கட்சி இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என கூறியுள்ளதாகவும் அருட்தந்தை மா.சத்திவேல் குறிப்பிட்டுள்ளார்.

இது தமிழர்களை ஏமாற்றுவதற்கான கூட்டு நரி தந்திர செயற்பாடு என்பதை தமிழர்கள் அறிவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு மத்தியில் 'தோற்றாலும் வென்றாலும் நாங்கள் பேச்சு வார்த்தைகள் கலந்து கொள்வோம்' என 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் வேட்டியை வரைந்து கட்டிக்கொண்டு நிற்பது நகைப்பை ஏற்படுத்துவதாக அருட்தந்தை மா.சத்திவேல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இனப் பிரச்சினையை தீர்க்கப் போவதாக கூறும் ரணில் தலைமையிலான கட்சி, அன்று சந்திரிக்க பண்டாரநாயக்க நாடாளுமன்றத்தில் முன்வைத்த தீர்வு திட்டத்தை நாடாளுமன்ற அமர்வின் போதே எரித்து நாடாளுமன்றத்தை அசிங்கப்படுத்தியிருந்ததை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

இன படுகொலையை நடாத்தி யுத்த வெற்றியென மார் தட்டும் மகிந்த 13 பிளஸ் என உலகையே ஏமாற்றியதையும் தமிழர்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்ததாக பதவிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச 'நாட்டில் இனப் பிரச்சினையை பிரச்சனை என்று ஒன்று இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மகிந்த மற்றும் சம்பந்தனின் சந்திப்பு தற்போது பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு திராணி இல்லை அருட்தந்தை மா.சத்திவேல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு தற்போது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அச்சநிலையை தோற்றுவித்துள்ளது.இந்த விடயம் தொடர்பாக அருட்தந்தை மா.சத்திவேலும் இன்றையதினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.இனப்பிரச்சனை தொடர்பான கலந்துரையாடல்களை மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்த வேண்டும் என்றும், ஆனால் அதற்கான திராணி கூட்டமைப்பிடம் இல்லை என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.நேற்றையதினம் சம்பந்தனை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,தனது கட்சி இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என கூறியுள்ளதாகவும் அருட்தந்தை மா.சத்திவேல் குறிப்பிட்டுள்ளார்.இது தமிழர்களை ஏமாற்றுவதற்கான கூட்டு நரி தந்திர செயற்பாடு என்பதை தமிழர்கள் அறிவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதற்கு மத்தியில் 'தோற்றாலும் வென்றாலும் நாங்கள் பேச்சு வார்த்தைகள் கலந்து கொள்வோம்' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் வேட்டியை வரைந்து கட்டிக்கொண்டு நிற்பது நகைப்பை ஏற்படுத்துவதாக அருட்தந்தை மா.சத்திவேல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.இன்று இனப் பிரச்சினையை தீர்க்கப் போவதாக கூறும் ரணில் தலைமையிலான கட்சி, அன்று சந்திரிக்க பண்டாரநாயக்க நாடாளுமன்றத்தில் முன்வைத்த தீர்வு திட்டத்தை நாடாளுமன்ற அமர்வின் போதே எரித்து நாடாளுமன்றத்தை அசிங்கப்படுத்தியிருந்ததை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.இன படுகொலையை நடாத்தி யுத்த வெற்றியென மார் தட்டும் மகிந்த 13 பிளஸ் என உலகையே ஏமாற்றியதையும் தமிழர்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அடுத்ததாக பதவிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச 'நாட்டில் இனப் பிரச்சினையை பிரச்சனை என்று ஒன்று இல்லை என்று தெரிவித்திருந்தார்.இந்நிலையில் மகிந்த மற்றும் சம்பந்தனின் சந்திப்பு தற்போது பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement