• Nov 06 2024

மத்திய கிழக்கு முழுவதும் பெரும் போரைத் தீவிரப்படுத்தும் அமெரிக்கா -ஈரானை இழுத்துவிட திட்டம்! samugammedia

Tamil nila / Dec 19th 2023, 8:45 pm
image

Advertisement

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில்ஒரு புதிய பணயக்கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் தெளிவான முன்னேற்றம்"இருப்பதாக அல் ஜசீரா கூறுகிறது

சி.ஐ.ஏ இயக்குனர் பில் பர்ன்ஸ்,இஸ்ரேலின் உளவுத் தலைவர் மற்றும் கத்தாரின் பிரதம மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்த வார்சாவுக்கு  சென்றுள்ளார்

எவ்வாறாயினும், " போரின் அடுத்த கட்டத்திற்கான" கால அட்டவணையாக ஜனவரி நடுப்பகுதியை இஸ்ரேல் சுட்டிக்காட்டுவதால், அதுவரை "விஷயங்கள் எப்படி நடக்கின்றன என்பதைப் பார்க்க,

வேண்டும் என்று ஹமாஸ் முடிவு செய்யலாம்" என்று அல் ஜசீரா கூறுகிறது

இப்படியாக போர்நிறுத்தம்பற்றி அமெரிக்கா கூறினாலும் இஸ்ரேல் தன்னிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை என்றுதான் கூறவேண்டும்.

இஸ்ரேலின் மெட்டுலா பிராந்திய கவுன்சிலின் தலைவர் டேவிட் அசோலாய் வானொலி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறிய விடயம் அமெரிக்காவின் அத்தனை முயற்சிகளையும் தோற்கடித்துவிடும் என்றுதான் கூறவேண்டும்.

காஸா மக்கள் லெபனானுக்கு இடம்பெயரவேண்டும் என்பதே அவரின் நிலைப்பாடு காஸாவை “ஆவுஷ்விட்ஸ்” என்று கூறியுள்ளார்.

ஆவுஷ்விட்ஸ் என்பது போலந்திலுள்ள நாஜிக்களின் பாரிய வதை முகாம் இதன் மூலம் அவர் ஒரு மனித அழிப்பு மையம் போல காசாவை  ஆக்கவேண்டும் என்று கூறியதாகவே விமர்சிக்கப்படுகின்றது.

மறுபுறம் பார்த்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, இஸ்ரேல் போர் விமானங்கள் சிரியாவின் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியில்  தாக்குதலையும், லெபனான் மீது நீண்ட தூரத் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.

இது யேமன் ஹவுத்திகளை இலக்காக கொண்டே நகர்த்தப்படுவதாக சர்வதேச வல்லுனர்கள் எச்சரிக்கின்றார்கள்

ஹூதிகள் செய்வது இஸ்ரேலுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக அண்மையாநட்களில் அமெரிக்காவும் அதன் நட்புநாடுகளும் விமர்சித்து வருகின்றன.

நாங்கள் ஹூதிகளைப் பற்றி பேசுகிறோம். ஆனால் ஹூதிகளுக்குப் பின்னால் இருப்பது யார்?

யார் அவர்களுக்கு ஆயுதம் தருகிறார்கள், அவர்களைச் செயல்படுத்துகிறார்கள்?அது ஈரான் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியதையே அமெரிக்காவும் கூறியுள்ளது.

குறிப்பாக  மத்தியதரைக் கடலில் ஏழு அமெரிக்கப் போர்க்கப்பல்களும், செங்கடல், அரபிக் கடல் மற்றும் பாரசீக வளைகுடாவில் இன்னும் ஒரு டசின்கணக்கான போர்க்கப்பல்களும் நிலைகொண்டுள்ளன.

இதற்கிடையில், யேமன் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளையும் குறிவைக்க பைடென் நிர்வாகத்திற்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. இதன் ஒரு வெளிப்பாடாகவே யேமனில் ஹூதி போராளிகள் வணிகக் கப்பல்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இராணுவப் படையைப் பயன்படுத்துவதை பைடென் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. “

விரைவில்  ஹூதி ஏவுகணை அமெரிக்க கடற்படை பாதுகாப்புகளை உடைத்து அமெரிக்க மாலுமிகளைக் கொல்லக்கூடும்.

 ஆதலால், வெள்ளை மாளிகைக்கு பதிலடி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை”என்று ஜேர்னல் குறிப்பிட்டது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது நடவடிக்கையை முடுக்கிவிட வேண்டும் என்று ஜேர்னல் கோருகிறது.

இதன்மூலம் அமெரிக்கா ஈரானுடன் மோதுமா என்று கேட்டால் அது சாத்தியமில்லை அப்படி நடந்தால் அமெரிக்காவும் அதன் நட்புநாடுகளும் என்வெல்லாம் எதிர்கொள்ளவேண்டிவரும் என்பதை அமெரிக்கா புரியாமல் இல்லை தற்போது ஒரு பகட்டுக்காக ஏமன் கவுத்திக்களை மிரட்டுகின்றோம் என்பதை காட்டுவதற்காக தங்கள் போர்க்கப்பல்களை மத்தியதரை கடலில்ல உலாவ விடுவார்களே தவிர மோதலுக்கு வாய்ப்பில்லை என்றே வல்லனர்கள் கூறுகின்றார்கள்.


மத்திய கிழக்கு முழுவதும் பெரும் போரைத் தீவிரப்படுத்தும் அமெரிக்கா -ஈரானை இழுத்துவிட திட்டம் samugammedia இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில்ஒரு புதிய பணயக்கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் தெளிவான முன்னேற்றம்"இருப்பதாக அல் ஜசீரா கூறுகிறதுசி.ஐ.ஏ இயக்குனர் பில் பர்ன்ஸ்,இஸ்ரேலின் உளவுத் தலைவர் மற்றும் கத்தாரின் பிரதம மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்த வார்சாவுக்கு  சென்றுள்ளார்எவ்வாறாயினும், " போரின் அடுத்த கட்டத்திற்கான" கால அட்டவணையாக ஜனவரி நடுப்பகுதியை இஸ்ரேல் சுட்டிக்காட்டுவதால், அதுவரை "விஷயங்கள் எப்படி நடக்கின்றன என்பதைப் பார்க்க,வேண்டும் என்று ஹமாஸ் முடிவு செய்யலாம்" என்று அல் ஜசீரா கூறுகிறதுஇப்படியாக போர்நிறுத்தம்பற்றி அமெரிக்கா கூறினாலும் இஸ்ரேல் தன்னிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை என்றுதான் கூறவேண்டும்.இஸ்ரேலின் மெட்டுலா பிராந்திய கவுன்சிலின் தலைவர் டேவிட் அசோலாய் வானொலி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறிய விடயம் அமெரிக்காவின் அத்தனை முயற்சிகளையும் தோற்கடித்துவிடும் என்றுதான் கூறவேண்டும்.காஸா மக்கள் லெபனானுக்கு இடம்பெயரவேண்டும் என்பதே அவரின் நிலைப்பாடு காஸாவை “ஆவுஷ்விட்ஸ்” என்று கூறியுள்ளார்.ஆவுஷ்விட்ஸ் என்பது போலந்திலுள்ள நாஜிக்களின் பாரிய வதை முகாம் இதன் மூலம் அவர் ஒரு மனித அழிப்பு மையம் போல காசாவை  ஆக்கவேண்டும் என்று கூறியதாகவே விமர்சிக்கப்படுகின்றது.மறுபுறம் பார்த்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, இஸ்ரேல் போர் விமானங்கள் சிரியாவின் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியில்  தாக்குதலையும், லெபனான் மீது நீண்ட தூரத் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.இது யேமன் ஹவுத்திகளை இலக்காக கொண்டே நகர்த்தப்படுவதாக சர்வதேச வல்லுனர்கள் எச்சரிக்கின்றார்கள்ஹூதிகள் செய்வது இஸ்ரேலுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக அண்மையாநட்களில் அமெரிக்காவும் அதன் நட்புநாடுகளும் விமர்சித்து வருகின்றன.நாங்கள் ஹூதிகளைப் பற்றி பேசுகிறோம். ஆனால் ஹூதிகளுக்குப் பின்னால் இருப்பது யார்யார் அவர்களுக்கு ஆயுதம் தருகிறார்கள், அவர்களைச் செயல்படுத்துகிறார்கள்அது ஈரான் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியதையே அமெரிக்காவும் கூறியுள்ளது.குறிப்பாக  மத்தியதரைக் கடலில் ஏழு அமெரிக்கப் போர்க்கப்பல்களும், செங்கடல், அரபிக் கடல் மற்றும் பாரசீக வளைகுடாவில் இன்னும் ஒரு டசின்கணக்கான போர்க்கப்பல்களும் நிலைகொண்டுள்ளன.இதற்கிடையில், யேமன் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளையும் குறிவைக்க பைடென் நிர்வாகத்திற்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. இதன் ஒரு வெளிப்பாடாகவே யேமனில் ஹூதி போராளிகள் வணிகக் கப்பல்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இராணுவப் படையைப் பயன்படுத்துவதை பைடென் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. “விரைவில்  ஹூதி ஏவுகணை அமெரிக்க கடற்படை பாதுகாப்புகளை உடைத்து அமெரிக்க மாலுமிகளைக் கொல்லக்கூடும். ஆதலால், வெள்ளை மாளிகைக்கு பதிலடி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை”என்று ஜேர்னல் குறிப்பிட்டது.ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது நடவடிக்கையை முடுக்கிவிட வேண்டும் என்று ஜேர்னல் கோருகிறது.இதன்மூலம் அமெரிக்கா ஈரானுடன் மோதுமா என்று கேட்டால் அது சாத்தியமில்லை அப்படி நடந்தால் அமெரிக்காவும் அதன் நட்புநாடுகளும் என்வெல்லாம் எதிர்கொள்ளவேண்டிவரும் என்பதை அமெரிக்கா புரியாமல் இல்லை தற்போது ஒரு பகட்டுக்காக ஏமன் கவுத்திக்களை மிரட்டுகின்றோம் என்பதை காட்டுவதற்காக தங்கள் போர்க்கப்பல்களை மத்தியதரை கடலில்ல உலாவ விடுவார்களே தவிர மோதலுக்கு வாய்ப்பில்லை என்றே வல்லனர்கள் கூறுகின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement