• Apr 28 2024

வரலாறு காணாத அளவு வீழ்ச்சியடைந்த ரூபாயின் பெறுமதி...! samugammedia

Sharmi / Aug 24th 2023, 10:25 am
image

Advertisement

பாகிஸ்தானில் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக ரூபாயின் பெறுமதி வரலாறு காணாத அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டொலருக்கான கேள்வி அதிகரித்த நிலையிலே இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அந்நிய செலாவணி வெளியேறுவதனை தடுக்கும் வகையில்  பாகிஸ்தானில் இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடி நிலைமையினை தவிர்க்கும் வகையில் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலரினை கடனாக வழங்கியுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதே சர்வதேச நாணய நிதிய கடன் உதவித் திட்டத்தின் முக்கிய நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி 0.6 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், டொலர் ஒன்றின் பெறுமதி 299 ரூபாவாகபதிவு செய்யப்பட்டுள்ளது.

காபந்து அரசாங்கத்தினால் ஆளப்படும் பாகிஸ்தான் மக்கள் கடுமையான அரசியல் பதற்றம்,பணவீக்கம் மற்றும் வட்டி வீதம் ஏனோஅவற்றுடன் போராடுகின்றனர்.

இதனிடையே, டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி 295 முதல் 305 ரூபா வரை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்வு, பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான நிலுவைத் தொகையை நீக்குதல் ஆகியனவே இந்த வீழ்ச்சிப் போக்குக்கு முக்கிய காரணமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வரலாறு காணாத அளவு வீழ்ச்சியடைந்த ரூபாயின் பெறுமதி. samugammedia பாகிஸ்தானில் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக ரூபாயின் பெறுமதி வரலாறு காணாத அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, டொலருக்கான கேள்வி அதிகரித்த நிலையிலே இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அந்நிய செலாவணி வெளியேறுவதனை தடுக்கும் வகையில்  பாகிஸ்தானில் இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இந்நிலையில் பொருளாதார நெருக்கடி நிலைமையினை தவிர்க்கும் வகையில் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலரினை கடனாக வழங்கியுள்ளது.இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதே சர்வதேச நாணய நிதிய கடன் உதவித் திட்டத்தின் முக்கிய நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது.இதன்படி, டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி 0.6 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், டொலர் ஒன்றின் பெறுமதி 299 ரூபாவாகபதிவு செய்யப்பட்டுள்ளது.காபந்து அரசாங்கத்தினால் ஆளப்படும் பாகிஸ்தான் மக்கள் கடுமையான அரசியல் பதற்றம்,பணவீக்கம் மற்றும் வட்டி வீதம் ஏனோஅவற்றுடன் போராடுகின்றனர்.இதனிடையே, டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி 295 முதல் 305 ரூபா வரை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்வு, பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான நிலுவைத் தொகையை நீக்குதல் ஆகியனவே இந்த வீழ்ச்சிப் போக்குக்கு முக்கிய காரணமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement