• Nov 26 2024

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்வு...!

Sharmi / Jun 8th 2024, 3:53 pm
image

மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிரம்பியுள்ளது.

இன்றைய (08) நிலவரப்படி, காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வான்வெளி மட்டத்திலிருந்து 12 அடிக்கும்,  மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 11 அடிக்கும் மேல் நிரம்பியுள்ளதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பதன் மூலம் விமலசுரேந்திர, லக்ஷபான, நியூ லக்ஷபான, கனியன் மற்றும் பொல்பிட்டிய ஆகிய நீர்மின் நிலையங்களில் அதிகபட்ச கொள்ளளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என நீர்மின் நிலைய பொறியியலாளர்கள் மேலும் தெரிவித்தனர். 


நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்வு. மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிரம்பியுள்ளது.இன்றைய (08) நிலவரப்படி, காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வான்வெளி மட்டத்திலிருந்து 12 அடிக்கும்,  மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 11 அடிக்கும் மேல் நிரம்பியுள்ளதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பதன் மூலம் விமலசுரேந்திர, லக்ஷபான, நியூ லக்ஷபான, கனியன் மற்றும் பொல்பிட்டிய ஆகிய நீர்மின் நிலையங்களில் அதிகபட்ச கொள்ளளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என நீர்மின் நிலைய பொறியியலாளர்கள் மேலும் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement