• Sep 17 2024

மூன்று மடங்கு அதிகரிக்கும் மனிதர்களின் எடை! நாசா வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்

Chithra / Dec 5th 2022, 8:14 am
image

Advertisement

நாசா விஞ்ஞானிகளின் கண்டுப்பிடிப்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய சூப்பர் எர்த் என்ற புறக்கோள் ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 8ம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட இந்த கோளுக்கு TOI-1075b என்று பெயரிடப்பட்டிருப்பதாகவும், இந்த புறக்கோளின் ஆரம், புவியை விட 1.8 மடங்கு அதிகம் என்றும் கூறப்பட்டிருகிறது.

சூப்பர் எர்த் என்பது பூமியை விட கிட்டத்தட்ட 10 மடங்கு பெரிய புறக்கோள் என கூறப்படுகின்றது.

இந்த புதிய சூப்பர் எர்த் பூமியில் இருந்து 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இந்த TOI-1075b சூர்ப்பர் எர்த்தில் ஹைட்ரஜன், ஹீலியத்தின் அடர்த்தியான வளிமண்டலத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகின்றது.


இந்த சூப்பர் எர்த்தில் மனிதர்கள் சென்றால் மூன்று மடங்கு எடை அதிகரித்து காணப்படுவார்கள் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

முன்னதாக, கெப்ளர்-10 சி என்ற மெகா எர்த் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இது பூமியில் இருந்து 560 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும், அந்த கெப்ளர்-10 சி முழுவதும் பாறைகள், திடப்பொருளால் ஆனவை என்றும் கூறப்பட்டது.

அந்த கிரகத்தை 2014ம் ஆண்டு ஹார்வர்டு ஸ்மித்சோனியன் விண்வெளி இயற்பியல் மைய விஞ்ஞானி கண்டுபிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மூன்று மடங்கு அதிகரிக்கும் மனிதர்களின் எடை நாசா வெளியிட்ட சுவாரஸ்ய தகவல் நாசா விஞ்ஞானிகளின் கண்டுப்பிடிப்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.இதற்கமைய சூப்பர் எர்த் என்ற புறக்கோள் ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நவம்பர் 8ம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட இந்த கோளுக்கு TOI-1075b என்று பெயரிடப்பட்டிருப்பதாகவும், இந்த புறக்கோளின் ஆரம், புவியை விட 1.8 மடங்கு அதிகம் என்றும் கூறப்பட்டிருகிறது.சூப்பர் எர்த் என்பது பூமியை விட கிட்டத்தட்ட 10 மடங்கு பெரிய புறக்கோள் என கூறப்படுகின்றது.இந்த புதிய சூப்பர் எர்த் பூமியில் இருந்து 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.மேலும், இந்த TOI-1075b சூர்ப்பர் எர்த்தில் ஹைட்ரஜன், ஹீலியத்தின் அடர்த்தியான வளிமண்டலத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகின்றது.இந்த சூப்பர் எர்த்தில் மனிதர்கள் சென்றால் மூன்று மடங்கு எடை அதிகரித்து காணப்படுவார்கள் என்றும் நாசா தெரிவித்துள்ளது.முன்னதாக, கெப்ளர்-10 சி என்ற மெகா எர்த் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இது பூமியில் இருந்து 560 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும், அந்த கெப்ளர்-10 சி முழுவதும் பாறைகள், திடப்பொருளால் ஆனவை என்றும் கூறப்பட்டது.அந்த கிரகத்தை 2014ம் ஆண்டு ஹார்வர்டு ஸ்மித்சோனியன் விண்வெளி இயற்பியல் மைய விஞ்ஞானி கண்டுபிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement