• May 07 2024

இந்தோனேசியாவின் செமேரூ எரிமலை வெடிப்பு - மக்களுக்கு எச்சரிக்கை

Chithra / Dec 5th 2022, 8:17 am
image

Advertisement

இந்தோனேசியாவின் மவுண்ட் செமேரு எரிமலை வெடித்துள்ளது.

இதனால் வானத்தில் சாம்பல் படிந்துள்ள நிலையில் நாட்டின் முக்கிய தீவான ஜாவாவின் ஒரு பகுதியில் இருந்து மக்கள் வெளியேறியுள்ளனர். காயங்கள் எதுவும் பதிவாகவில்லை

எனினும் மக்கள் அப்பகுதியிலிருந்து குறைந்தது 8 கிமீ (5 மைல்) தொலைவில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த எரிமலை வெடிப்பை அடுத்து, ஜப்பான், அதன் தென்பகுதியில் உள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

3,676 மீ (12,060 அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்த எரிமலை வெடித்த பிறகு செமருவில் இருந்து கொட்டிய எரிமலையின் படிவுகளால், பனிச்சரிவுகள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே ஜப்பான் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

செமரு மலை உள்ளூர் நேரப்படி 02:46 மணிக்கு வெடிக்கத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செமேரு மலை 'தி கிரேட் மவுண்டன்' என்றும் அழைக்கப்படுகிறது இது கடைசியாக சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் வெடித்தது, அதன்போது குறைந்தது 50 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தோனேசியாவின் செமேரூ எரிமலை வெடிப்பு - மக்களுக்கு எச்சரிக்கை இந்தோனேசியாவின் மவுண்ட் செமேரு எரிமலை வெடித்துள்ளது.இதனால் வானத்தில் சாம்பல் படிந்துள்ள நிலையில் நாட்டின் முக்கிய தீவான ஜாவாவின் ஒரு பகுதியில் இருந்து மக்கள் வெளியேறியுள்ளனர். காயங்கள் எதுவும் பதிவாகவில்லைஎனினும் மக்கள் அப்பகுதியிலிருந்து குறைந்தது 8 கிமீ (5 மைல்) தொலைவில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.இந்த எரிமலை வெடிப்பை அடுத்து, ஜப்பான், அதன் தென்பகுதியில் உள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.3,676 மீ (12,060 அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்த எரிமலை வெடித்த பிறகு செமருவில் இருந்து கொட்டிய எரிமலையின் படிவுகளால், பனிச்சரிவுகள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்தே ஜப்பான் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.செமரு மலை உள்ளூர் நேரப்படி 02:46 மணிக்கு வெடிக்கத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.செமேரு மலை 'தி கிரேட் மவுண்டன்' என்றும் அழைக்கப்படுகிறது இது கடைசியாக சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் வெடித்தது, அதன்போது குறைந்தது 50 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement