• May 18 2024

உடனடியாக வரி விதிக்குமாறு கோரும் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள்!

Tamil nila / Jan 19th 2023, 1:37 pm
image

Advertisement

உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் தங்களுக்கு வரி விதிக்குமாறு உலக அரசாங்கங்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.


200க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு உடனடியாக இவ்வாறு வரி விதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.


அவர்களில் Disneyயின் வாரிசான அபிகேல் டிஸ்னியும், பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் மார்க் ரஃபலோவும் அடங்குவர்.


அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினத்தால் சிரமப்படும் பில்லியன் கணக்கானோருக்கு உதவுவதே அவர்களின் நோக்கம் என்று குறிப்பிடப்படுகின்றது.


அளவுக்கு அதிகமான சொத்துகளைக் குவிப்பதைக் கையாளும் நேரம் இதுவென்று அவர்கள் கடிதம் மூலம் தெரிவித்தனர்.


அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது பேரழிவுக்கு இட்டுச்செல்லக்கூடும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து குவிக்கப்பட்ட புதிய சொத்துகளில் 3இல் 2 பங்கு உலகின் ஆகப் பெரிய செல்வந்தர்களில் 1 சதவீதம் சென்றது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.


கடந்த கால் நூற்றாண்டில் முதல்முறையாக அளவுக்கு அதிகமான சொத்துக் குவிப்பு கூடியிருக்கும் அதே வேளையில் கடுமையான வறுமையும் உயர்ந்து வருவதாக Oxfam அறநிறுவனம் குறிப்பிட்டது.


உடனடியாக வரி விதிக்குமாறு கோரும் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் தங்களுக்கு வரி விதிக்குமாறு உலக அரசாங்கங்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.200க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு உடனடியாக இவ்வாறு வரி விதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.அவர்களில் Disneyயின் வாரிசான அபிகேல் டிஸ்னியும், பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் மார்க் ரஃபலோவும் அடங்குவர்.அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினத்தால் சிரமப்படும் பில்லியன் கணக்கானோருக்கு உதவுவதே அவர்களின் நோக்கம் என்று குறிப்பிடப்படுகின்றது.அளவுக்கு அதிகமான சொத்துகளைக் குவிப்பதைக் கையாளும் நேரம் இதுவென்று அவர்கள் கடிதம் மூலம் தெரிவித்தனர்.அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது பேரழிவுக்கு இட்டுச்செல்லக்கூடும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து குவிக்கப்பட்ட புதிய சொத்துகளில் 3இல் 2 பங்கு உலகின் ஆகப் பெரிய செல்வந்தர்களில் 1 சதவீதம் சென்றது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.கடந்த கால் நூற்றாண்டில் முதல்முறையாக அளவுக்கு அதிகமான சொத்துக் குவிப்பு கூடியிருக்கும் அதே வேளையில் கடுமையான வறுமையும் உயர்ந்து வருவதாக Oxfam அறநிறுவனம் குறிப்பிட்டது.

Advertisement

Advertisement

Advertisement