• May 07 2024

கை விலங்கோடு நீண்ட தூரம் நீச்சல் அடித்து உலக சாதனை படைத்த இளைஞன்!samugammedia

Sharmi / Apr 5th 2023, 9:24 pm
image

Advertisement

எகிப்து நாட்டை சேர்ந்த நீச்சல் வீரர் ஷேகப் அல்லாம்(Sehab Allam) என்பவர் கையில் விலங்கோடு அதிக தூரம் நீந்தி சென்று உலக சாதனை படைத்துள்ளார்.


கைகளை உபயோகப்படுத்தாமல் நீச்சல் அடிப்பதென்பது தேர்ந்த நீச்சல் வீரரால் கூட முடியாத காரியம் ஆகும். ஆனால் எகிப்து நாட்டின் வீரர் கையில் பூட்டப்பட்ட விலங்கோடு 11 கிலோமீட்டருக்கு மேல் நீந்தி சென்றுள்ளார்.


அவர் சரியாக 6 மணி நேரத்தில் 11.649 கி.மீ தூரம் நீந்தி சென்று உலக சாதனை படைத்துள்ளார்.

அரேபிய நாட்டில் நடைபெற்ற திறந்த வெளி நீச்சல் போட்டியில் பங்கு பெற்ற ஷேகப் அல்லாம் கையில் விலங்கு பூட்டிக் கொண்டு நீந்தும் போது உதவி படகுகள் தன்னை பின் தொடர மறுத்துவிட்டார்.


”போட்டிக்காக பயிற்சி செய்யும் போது ​​நான் கைவிலங்கு அணிந்து நீந்துவதைப் பார்க்க கூட்டம் கூடிவிடும். இதனால் நான் அமைதியான பகுதிகளில் நீந்த விரும்புகிறேன், பொதுவாக கடற்கரைகளின் ஓரங்களில் நான் பயிற்சி எடுப்பேன்” என செய்தியாளர்களிடம் ஷேகப் கூறியுள்ளார்.

”போட்டியை முடித்து சான்றிதழை கையில் வாங்கும் வரை என்னால் எதைப் பற்றியும் சிந்திக்க முடியவில்லை. தற்போது உலக சாதனை படைத்த நீச்சல் வீரராக இருப்பது பெருமையாகவுள்ளது. என்னால் முடிந்த வரை இந்த சாதனையை தக்க வைக்க முயல்வேன்” என புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.



கை விலங்கோடு நீண்ட தூரம் நீச்சல் அடித்து உலக சாதனை படைத்த இளைஞன்samugammedia எகிப்து நாட்டை சேர்ந்த நீச்சல் வீரர் ஷேகப் அல்லாம்(Sehab Allam) என்பவர் கையில் விலங்கோடு அதிக தூரம் நீந்தி சென்று உலக சாதனை படைத்துள்ளார்.கைகளை உபயோகப்படுத்தாமல் நீச்சல் அடிப்பதென்பது தேர்ந்த நீச்சல் வீரரால் கூட முடியாத காரியம் ஆகும். ஆனால் எகிப்து நாட்டின் வீரர் கையில் பூட்டப்பட்ட விலங்கோடு 11 கிலோமீட்டருக்கு மேல் நீந்தி சென்றுள்ளார். அவர் சரியாக 6 மணி நேரத்தில் 11.649 கி.மீ தூரம் நீந்தி சென்று உலக சாதனை படைத்துள்ளார். அரேபிய நாட்டில் நடைபெற்ற திறந்த வெளி நீச்சல் போட்டியில் பங்கு பெற்ற ஷேகப் அல்லாம் கையில் விலங்கு பூட்டிக் கொண்டு நீந்தும் போது உதவி படகுகள் தன்னை பின் தொடர மறுத்துவிட்டார். ”போட்டிக்காக பயிற்சி செய்யும் போது ​​நான் கைவிலங்கு அணிந்து நீந்துவதைப் பார்க்க கூட்டம் கூடிவிடும். இதனால் நான் அமைதியான பகுதிகளில் நீந்த விரும்புகிறேன், பொதுவாக கடற்கரைகளின் ஓரங்களில் நான் பயிற்சி எடுப்பேன்” என செய்தியாளர்களிடம் ஷேகப் கூறியுள்ளார்.”போட்டியை முடித்து சான்றிதழை கையில் வாங்கும் வரை என்னால் எதைப் பற்றியும் சிந்திக்க முடியவில்லை. தற்போது உலக சாதனை படைத்த நீச்சல் வீரராக இருப்பது பெருமையாகவுள்ளது. என்னால் முடிந்த வரை இந்த சாதனையை தக்க வைக்க முயல்வேன்” என புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement