• Nov 14 2024

புலிச்சின்னத்துடன் தைரியமாக சென்ற இளைஞன்; கைது செய்த ரீஐடி - விடுவிக்குமாறு அமைச்சர் டக்ளசிடம் உதவிகோரிய பெற்றோர் samugammedia

Chithra / Dec 2nd 2023, 1:34 pm
image




யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் பெற்றோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, மகனின் விடுதலைக்கு உதவுமாறும் கோரியுள்ளனர். 

அதாவது தம்மிடம் பணவசதி இல்லை என்றும் தமது மகனின் சார்பாக சட்டத்தரணி ஒருவர் ஆஜராகியிருந்தார். 

வாதாடிய பின் அவர்  20000 ரூபா தருமாறு கேட்டார். 

என்னிடம் அந்த நேரம் பணம் இல்லை. எனது நகைகளை அடகு வைத்து தான்  சட்டத்தரணிக்கு 20 ஆயிரம்  ரூபாவை வழங்கியதாக  அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களுக்கு  நிலமைகளை எடுத்துக் கூறினார்.

இதனையடுத்து,  குறித்த இளைஞனின்  பெற்றோருக்கு நம்பிக்கையளித்த அமைச்சர், 

சஞ்சலமடைந்து தேவையற்ற பண விரயங்களை செய்யாமல் பொறுமையாக இருக்குமாறும் ஆறுதல் தெரிவித்து அனுப்பி வைத்துள்ளார்.

இவர்களுடனான சந்திப்பில் சட்டத்தரணி ஸ்ரனிஸ்லஸ் உடனிருந்தார். 

கடந்த 27 ம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், 

கொடிகாமம் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விற்கு சென்ற அப்பிரதேசத்தினை சேர்ந்த  சுரேஸ்குமார் டனுஜன்  என்ற இளைஞன் தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படம், சின்னம் ஆகியவை பொறிக்கப்பட்ட  ரீசேர்ட் அணிந்திருந்தார்.

இதனடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலிச்சின்னத்துடன் தைரியமாக சென்ற இளைஞன்; கைது செய்த ரீஐடி - விடுவிக்குமாறு அமைச்சர் டக்ளசிடம் உதவிகோரிய பெற்றோர் samugammedia யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் பெற்றோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, மகனின் விடுதலைக்கு உதவுமாறும் கோரியுள்ளனர். அதாவது தம்மிடம் பணவசதி இல்லை என்றும் தமது மகனின் சார்பாக சட்டத்தரணி ஒருவர் ஆஜராகியிருந்தார். வாதாடிய பின் அவர்  20000 ரூபா தருமாறு கேட்டார். என்னிடம் அந்த நேரம் பணம் இல்லை. எனது நகைகளை அடகு வைத்து தான்  சட்டத்தரணிக்கு 20 ஆயிரம்  ரூபாவை வழங்கியதாக  அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களுக்கு  நிலமைகளை எடுத்துக் கூறினார்.இதனையடுத்து,  குறித்த இளைஞனின்  பெற்றோருக்கு நம்பிக்கையளித்த அமைச்சர், சஞ்சலமடைந்து தேவையற்ற பண விரயங்களை செய்யாமல் பொறுமையாக இருக்குமாறும் ஆறுதல் தெரிவித்து அனுப்பி வைத்துள்ளார்.இவர்களுடனான சந்திப்பில் சட்டத்தரணி ஸ்ரனிஸ்லஸ் உடனிருந்தார். கடந்த 27 ம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கொடிகாமம் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விற்கு சென்ற அப்பிரதேசத்தினை சேர்ந்த  சுரேஸ்குமார் டனுஜன்  என்ற இளைஞன் தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படம், சின்னம் ஆகியவை பொறிக்கப்பட்ட  ரீசேர்ட் அணிந்திருந்தார்.இதனடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement