• May 20 2024

இலங்கையில் சுகாதார பூச்சியியல் அலுவலர்கள் பற்றாக்குறை...! samugammedia

Anaath / Sep 9th 2023, 4:18 pm
image

Advertisement

இலங்கையில் 120 சுகாதார பூச்சியியல் அலுவலர்கள் பதவிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதால் எதிர்காலத்தில் தொற்றுநோய் நிலைமைகளை நிர்வகிப்பதில் நெருக்கடிகள்  ஏற்படக்கூடும் என பூச்சியியல் அலுவலர்கள் சங்கதின் தலைவர் நஜித் சுமனசேன தெரிவித்தார்.

மேலும், இவ்வாறானதொரு நிலைமை இருந்தும் இவ்வருடம் மாத்திரம் சுமார் பத்து சுகாதார பூச்சியியல் அலுவலர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அவர்களில் சிலர் விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளதாகவும், சிலர் வேலைகளை விட்டுவிட்டு வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வருடாந்தம் சுமார் 05 உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவதால், தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சுகாதார பூச்சியியல் அலுவலர்கள் பற்றாக்குறை. samugammedia இலங்கையில் 120 சுகாதார பூச்சியியல் அலுவலர்கள் பதவிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதால் எதிர்காலத்தில் தொற்றுநோய் நிலைமைகளை நிர்வகிப்பதில் நெருக்கடிகள்  ஏற்படக்கூடும் என பூச்சியியல் அலுவலர்கள் சங்கதின் தலைவர் நஜித் சுமனசேன தெரிவித்தார்.மேலும், இவ்வாறானதொரு நிலைமை இருந்தும் இவ்வருடம் மாத்திரம் சுமார் பத்து சுகாதார பூச்சியியல் அலுவலர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.அவர்களில் சிலர் விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளதாகவும், சிலர் வேலைகளை விட்டுவிட்டு வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, வருடாந்தம் சுமார் 05 உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவதால், தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement