• Nov 28 2024

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்நாட்டில் நீதியில்லை...! சர்வதேச நீதியே இறுதி வழி...! சபா.குகதாஸ் வலியுறுத்து...!samugammedia

Sharmi / Jan 31st 2024, 10:16 am
image

உள்நாட்டில் நீதிமன்ற தீர்ப்பையே நடைமுறைப்படுத்த முடியாத ஆட்சியாளர்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு கிடைக்காது என்பதாலேயே சர்வதேச நீதியை கோரி நிற்பதாக  வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா. குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காஸா- இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய பரிந்துரையை முழுமையாக கவனத்தில் கொள்ளாது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்க் கட்சிகள் சர்வதேச நீதிமன்றம் என்ற மாயை காட்டி 14 ஆண்டுகளாக ஏமாற்றி வருகின்றனர் என வழமையான பித்தலாட்டத்தை ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

கர்தினால் மல்க்கம் றஞ்சித் ஆண்டகை ஏன் சர்வதேச நீதிமன்ற கதவை தட்டினார்.   தற்போது உள்ள எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உள்நாட்டு நீதித்துறையில் நம்பிக்கை இல்லை சர்வதேச விசாரணை வேண்டும் என கதறிய போது மௌனமாக இருந்த டக்ளஸ் தேவானந்தா தற்போது மாயை என்று கூறுவது சர்வதேச நீதிமன்றத்தின் கடந்தகால வரலாறு தெளிவற்று இருப்பதையே காட்டுகிறது.

சிங்கள ஆட்சியாளர்கள் சர்வதேச விசாரணை என்றவுடன் அஞ்சுகின்றனர். அவ்வாறான தீர்மானங்கள் வருவதை தடுக்க வல்லாதிக்க நாடுகளுக்கு நாட்டின் இறைமையைக் கூட தாரைவார்க்கின்றனர்.

 மனிதவுரிமைப் பேரவையின் தீர்மானங்களை நிராகரிப்பதாக உடன் அறிவிப்புக்களை தங்கள் பிரதிநிதிகள் மூலமாக வெளியிடுகின்றனர் உள்ளக நீதிப் பொறிமுறையை பரிந்துரையுங்கள் என மனிதவுரிமைப் பேரவையில் கேட்கின்றனர் இறுதிப் போர்க்குற்ற ஆதாரங்கள் சேகரித்தல் பராமரித்தல் விடையத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். அப்படி என்றால் அமைச்சரே நீங்கள் கூறும் மாயை வேறா? அல்லது மாயையை கண்டு  சிங்கள பேரினவாதம் ஏன் அஞ்சுகின்றதா ?

உள் நாட்டில் நீதிமன்ற தீர்ப்பையே நடைமுறைப்படுத்த முடியாத ஆட்சியாளர்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி இல்லை என்பதனால் தான் சர்வதேச நீதியை தமிழர்கள் மட்டுமல்ல இன்று சிங்களவர்களும் கோரியுள்ளனர்.

வீடு கொழுத்தும் ராஜாவுக்கு கொள்ளி எடுத்துக் கொடுக்கும் மந்திரியின் கதை தான் சிங்கள ஆட்சியாளரின் இன்றைய நிலை. 

ஆகவே, சர்வதேச அதிகாரத் தரப்புக்களின் முன் எச்சரிக்கையே அரகல போராட்டத்தின் எழுச்சியும் அதன் அடக்கமும்  எனவே எதிர் காலத்தில் எந்த நேரத்திலும் கடுமையான தீர்மானங்கள் வரலாம் அதற்கான முழுமையான கோவைகள் அதிகாரத் தரப்பிடம் தயாராகவே உள்ளது. இது முதன்மையான சிங்கள தலைவர்களுக்கு நன்றாகத் தெரியும். எதிர்கால தேர்தல் முடிவுகள் இவற்றுக்கான பாதையை திறக்கும்.

சர்வதேச நீதிமன்றம்( ICJ) மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC )அதன் நியாயாதிக்கம் நியதிச் சட்டங்கள் அதன் வரையறைகள் என்பன தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழக்கக் கூடாது காரணம் உள் நாட்டில் நீதி இல்லை என்ற மன எண்ணம்  தமிழர்களை தாண்டி சிங்கள மக்களிடமும் வந்துள்ளது எனவே சர்வதேச நீதியே இறுதி வழி எனவும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்நாட்டில் நீதியில்லை. சர்வதேச நீதியே இறுதி வழி. சபா.குகதாஸ் வலியுறுத்து.samugammedia உள்நாட்டில் நீதிமன்ற தீர்ப்பையே நடைமுறைப்படுத்த முடியாத ஆட்சியாளர்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு கிடைக்காது என்பதாலேயே சர்வதேச நீதியை கோரி நிற்பதாக  வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா. குகதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,காஸா- இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய பரிந்துரையை முழுமையாக கவனத்தில் கொள்ளாது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்க் கட்சிகள் சர்வதேச நீதிமன்றம் என்ற மாயை காட்டி 14 ஆண்டுகளாக ஏமாற்றி வருகின்றனர் என வழமையான பித்தலாட்டத்தை ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.கர்தினால் மல்க்கம் றஞ்சித் ஆண்டகை ஏன் சர்வதேச நீதிமன்ற கதவை தட்டினார்.   தற்போது உள்ள எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உள்நாட்டு நீதித்துறையில் நம்பிக்கை இல்லை சர்வதேச விசாரணை வேண்டும் என கதறிய போது மௌனமாக இருந்த டக்ளஸ் தேவானந்தா தற்போது மாயை என்று கூறுவது சர்வதேச நீதிமன்றத்தின் கடந்தகால வரலாறு தெளிவற்று இருப்பதையே காட்டுகிறது.சிங்கள ஆட்சியாளர்கள் சர்வதேச விசாரணை என்றவுடன் அஞ்சுகின்றனர். அவ்வாறான தீர்மானங்கள் வருவதை தடுக்க வல்லாதிக்க நாடுகளுக்கு நாட்டின் இறைமையைக் கூட தாரைவார்க்கின்றனர். மனிதவுரிமைப் பேரவையின் தீர்மானங்களை நிராகரிப்பதாக உடன் அறிவிப்புக்களை தங்கள் பிரதிநிதிகள் மூலமாக வெளியிடுகின்றனர் உள்ளக நீதிப் பொறிமுறையை பரிந்துரையுங்கள் என மனிதவுரிமைப் பேரவையில் கேட்கின்றனர் இறுதிப் போர்க்குற்ற ஆதாரங்கள் சேகரித்தல் பராமரித்தல் விடையத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். அப்படி என்றால் அமைச்சரே நீங்கள் கூறும் மாயை வேறா அல்லது மாயையை கண்டு  சிங்கள பேரினவாதம் ஏன் அஞ்சுகின்றதா உள் நாட்டில் நீதிமன்ற தீர்ப்பையே நடைமுறைப்படுத்த முடியாத ஆட்சியாளர்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி இல்லை என்பதனால் தான் சர்வதேச நீதியை தமிழர்கள் மட்டுமல்ல இன்று சிங்களவர்களும் கோரியுள்ளனர்.வீடு கொழுத்தும் ராஜாவுக்கு கொள்ளி எடுத்துக் கொடுக்கும் மந்திரியின் கதை தான் சிங்கள ஆட்சியாளரின் இன்றைய நிலை. ஆகவே, சர்வதேச அதிகாரத் தரப்புக்களின் முன் எச்சரிக்கையே அரகல போராட்டத்தின் எழுச்சியும் அதன் அடக்கமும்  எனவே எதிர் காலத்தில் எந்த நேரத்திலும் கடுமையான தீர்மானங்கள் வரலாம் அதற்கான முழுமையான கோவைகள் அதிகாரத் தரப்பிடம் தயாராகவே உள்ளது. இது முதன்மையான சிங்கள தலைவர்களுக்கு நன்றாகத் தெரியும். எதிர்கால தேர்தல் முடிவுகள் இவற்றுக்கான பாதையை திறக்கும்.சர்வதேச நீதிமன்றம்( ICJ) மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC )அதன் நியாயாதிக்கம் நியதிச் சட்டங்கள் அதன் வரையறைகள் என்பன தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழக்கக் கூடாது காரணம் உள் நாட்டில் நீதி இல்லை என்ற மன எண்ணம்  தமிழர்களை தாண்டி சிங்கள மக்களிடமும் வந்துள்ளது எனவே சர்வதேச நீதியே இறுதி வழி எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement