காட்டு யானைகளின் வாழ்விடங்களில் காணி அபிவிருத்தி இல்லை!

காட்டு யானைகளின் வாழ்விடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை காணி அபிவிருத்தித் திட்டங்களுக்கு வழங்குவதில்லை என உறுதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இனிமேல் அபிவிருத்தித் திட்டங்களுக்கு காணிகளை வழங்கும்போது இருமுறை சிந்திக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சுற்றாடல் மதிப்பீடுகளை புறக்கணித்து காட்டு யானைகள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் படையெடுப்பதே யானை தாக்குதலுக்கு காரணம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை தாண்டியுள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் யானைகள் மற்றும் மனிதருக்கு இடையிலான மோதலினால் காட்டு யானைகளும் மனிதர்களும் உயிரிழப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை