• May 18 2024

ஊடகங்களை அடக்க வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு இல்லை..!அமைச்சரவை பேச்சாளர் சட்டமூலம் தொடர்பில் கருத்து.! samugammedia

Sharmi / Jun 13th 2023, 2:33 pm
image

Advertisement

ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்படும் பட்சத்தில், அதனை மீள வழங்கமுடியாது என்ற சரத்து உத்தேச இலத்திரனியல் ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலத்தில் இல்லை என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.

உத்தேச இலத்திரனியல் ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டமூலங்கள் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

ஊடகங்களை ஒடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை. நாட்டில் ஊடக கலாசாரம் வளர்ச்சியடைவதற்கு தேவையான ஒழுங்குமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அதற்காக சர்வதேச தரத்திலான முறைமை பின்பற்றப்பட வேண்டும்.

ஊடகங்களை அடக்க வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு இல்லை. அவர் ஒரு ஊடக குடும்ப பாரம்பரியம் கொண்ட தலைவர். குற்றவியல் சட்டத்தை ஒழித்தார். சில குறிப்பிட்ட வழக்குகளில் தனி நபர்களின் தனியுரிமையை மீறும் பத்திரிகையாளர்களை குற்றவியல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து தண்டிக்கும் திறன் நாட்டில் இருந்தது,

ஊடக தர்மம் தொடர்பில் நாட்டில், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் இருந்தன. அதனை நீக்கியவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. எனவே, சில சந்தர்ப்பங்களில், ஊடகங்களுக்கு அதிக சுதந்திரம் வழங்கியதற்காக ஜனாதிபதி விமர்சிக்கப்பட்டார்.

இந்த உத்தேச சட்டமூலம் ஆங்கிலத்தில் இல்லை. ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டு அச்சிடப்பட்டு ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களில் சாதகமான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டால் அவை குறித்து விவாதிக்கலாம்.

நாகரீக சமூகத்தில் அச்சுறுத்தல்கள், அவமானங்கள், ஏளனங்கள் இல்லாத மேம்பட்ட ஊடகக் கலாச்சாரத்தை உருவாக்கத் தேவையான விதிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இது ஒரு வரைவு மட்டுமே. தேவைப்படும் போது திருத்தங்கள் செய்யலாம்.பொறுப்பு அமைச்சர் என்ற வகையில் இதற்கான அதிகாரம் என்னிடம் உள்ளது.

எந்த ஊடகத்திற்கும் என்னால் உரிமம் வழங்க முடியும். அதையும் இரத்து செய்யலாம். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை.

ஒரு வளர்ந்த ஊடகக் கலாச்சாரத்திற்கு இது சம்பந்தமாக ஒருவித சர்வதேச தரநிலை அமைப்பு இருப்பது அவசியம். ஒலிபரப்பு அதிகாரசபை சட்டம் முன்வைக்கப்பட்ட பின்னரும் ஊடக நிறுவனங்களின் உரிமங்களை மீள வழங்குவதற்கான உறுதிமொழி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஊடகங்களை அடக்க வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு இல்லை.அமைச்சரவை பேச்சாளர் சட்டமூலம் தொடர்பில் கருத்து. samugammedia ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்படும் பட்சத்தில், அதனை மீள வழங்கமுடியாது என்ற சரத்து உத்தேச இலத்திரனியல் ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலத்தில் இல்லை என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.உத்தேச இலத்திரனியல் ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டமூலங்கள் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.ஊடகங்களை ஒடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை. நாட்டில் ஊடக கலாசாரம் வளர்ச்சியடைவதற்கு தேவையான ஒழுங்குமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக சர்வதேச தரத்திலான முறைமை பின்பற்றப்பட வேண்டும்.ஊடகங்களை அடக்க வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு இல்லை. அவர் ஒரு ஊடக குடும்ப பாரம்பரியம் கொண்ட தலைவர். குற்றவியல் சட்டத்தை ஒழித்தார். சில குறிப்பிட்ட வழக்குகளில் தனி நபர்களின் தனியுரிமையை மீறும் பத்திரிகையாளர்களை குற்றவியல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து தண்டிக்கும் திறன் நாட்டில் இருந்தது, ஊடக தர்மம் தொடர்பில் நாட்டில், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் இருந்தன. அதனை நீக்கியவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. எனவே, சில சந்தர்ப்பங்களில், ஊடகங்களுக்கு அதிக சுதந்திரம் வழங்கியதற்காக ஜனாதிபதி விமர்சிக்கப்பட்டார். இந்த உத்தேச சட்டமூலம் ஆங்கிலத்தில் இல்லை. ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டு அச்சிடப்பட்டு ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இரண்டு வாரங்களில் சாதகமான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டால் அவை குறித்து விவாதிக்கலாம். நாகரீக சமூகத்தில் அச்சுறுத்தல்கள், அவமானங்கள், ஏளனங்கள் இல்லாத மேம்பட்ட ஊடகக் கலாச்சாரத்தை உருவாக்கத் தேவையான விதிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இது ஒரு வரைவு மட்டுமே. தேவைப்படும் போது திருத்தங்கள் செய்யலாம்.பொறுப்பு அமைச்சர் என்ற வகையில் இதற்கான அதிகாரம் என்னிடம் உள்ளது. எந்த ஊடகத்திற்கும் என்னால் உரிமம் வழங்க முடியும். அதையும் இரத்து செய்யலாம். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. ஒரு வளர்ந்த ஊடகக் கலாச்சாரத்திற்கு இது சம்பந்தமாக ஒருவித சர்வதேச தரநிலை அமைப்பு இருப்பது அவசியம். ஒலிபரப்பு அதிகாரசபை சட்டம் முன்வைக்கப்பட்ட பின்னரும் ஊடக நிறுவனங்களின் உரிமங்களை மீள வழங்குவதற்கான உறுதிமொழி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement