அரசியலமைப்பு மற்றும் அதுகுறித்த சட்டம் தொடர்பில் நாம் முழுமையான புரிதலுடனேயே செயற்படுகின்றோம். எனவே உதய கம்மன்பில இது குறித்து அரசாங்கத்துக்கு கற்பிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியலமைப்பு தொடர்பிலும் அது தொடர்பான சட்டம் தொடர்பிலும் முழுமையாக புரிதலுடனேயே நாம் செயற்பட்டு வருகின்றோம். கம்மன்பிலவினர் செய்த சேவைகளின் பலனையே இன்று இந்த நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
எனவே அவ்வாறானவர்களின் கருத்துக்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க நாம் விரும்பவில்லை. அவர் எமக்கு கற்றுக் கொடுக்கவும் தேவையில்லை என்றார்.
கம்மன்பில அரசுக்கு கற்பிக்க வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் நளிந்த பதிலடி அரசியலமைப்பு மற்றும் அதுகுறித்த சட்டம் தொடர்பில் நாம் முழுமையான புரிதலுடனேயே செயற்படுகின்றோம். எனவே உதய கம்மன்பில இது குறித்து அரசாங்கத்துக்கு கற்பிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,அரசியலமைப்பு தொடர்பிலும் அது தொடர்பான சட்டம் தொடர்பிலும் முழுமையாக புரிதலுடனேயே நாம் செயற்பட்டு வருகின்றோம். கம்மன்பிலவினர் செய்த சேவைகளின் பலனையே இன்று இந்த நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது.எனவே அவ்வாறானவர்களின் கருத்துக்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க நாம் விரும்பவில்லை. அவர் எமக்கு கற்றுக் கொடுக்கவும் தேவையில்லை என்றார்.