• Nov 23 2024

அரசியல் தீர்வு தொடர்பில் கோசமிட்டு பாராளுமன்ற ஆசனத்தை நிரப்பும் தமிழ் எம்.பிகளால் எவ்வித பயனும் இல்லை...! குமரகுருபரன் குற்றச்சாட்டு...!samugammedia

Sharmi / Dec 8th 2023, 1:45 pm
image

பன்நெடுங்காலமாக அரசியல் தீர்வு என ஆட்சி செய்து கொண்டுள்ள தமிழ் தலைவர்கள் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தீர்வுக்கு உந்து சக்தியை கொடுக்கின்றார்களா என்றால் இல்லை அரசியல் தீர்வு வேண்டும் என கூறிக்கொண்டே பாராளுமன்ற ஆசனத்தை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்களே தவிர அரசியல் தீர்விற்காக எதுவும் செய்யவில்லை என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் 

 அரசியல் தலைவர்கள் பேசுவது போல இரண்டு தேசம் ஒரு நாடு என்று அரசியலுக்காக பேசுவதே தவிர தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக்கொடுப்பதற்காக அல்ல.

எனவே பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதியாக இருப்பதை விடுத்து ஜனாதிபதியுடன் பேசுங்கள் ஜனாதிபதிக்கு உந்து சக்திகளை கொடுக்க வேண்டும் ஜனாதிபதி அரசியல் தீர்வை முன்வைக்கவில்லை என்று உலகிற்கு எடுத்து காட்ட வேண்டும்.

அதனை விடுத்து நடக்க முடியாதவைக்காக யதார்த்தத்திற்காக அரசியல் செய்வது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் 

மாகாண சபையின் கீழ் தான் இன்று அதிகமான பாடசாலைகள் இருக்கின்றது அவற்றினுடைய நிர்வாகம் அவற்றினுடைய ஆசிரியர் நியமனங்கள் தொங்கி நிற்கின்றது. ஜனாதிபதி கூறியது நடைபெற வேண்டுமானால் மாகாணசபை தேர்தல் நடைபெற வேண்டும். 

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபைக்காக நிர்வாக கமிட்டியை நியமிப்பது முற்றாக தவிர்க்க வேண்டும். இவ்வாறான செயற்பாடானது ஜனநாயக துரோகம் மாகாணங்களுக்காக நிர்வாக கமிட்டிகள் நியமிக்கபடுவதை தமிழ் பிரதிநிதிகள் எதிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு தொடர்பில் கோசமிட்டு பாராளுமன்ற ஆசனத்தை நிரப்பும் தமிழ் எம்.பிகளால் எவ்வித பயனும் இல்லை. குமரகுருபரன் குற்றச்சாட்டு.samugammedia பன்நெடுங்காலமாக அரசியல் தீர்வு என ஆட்சி செய்து கொண்டுள்ள தமிழ் தலைவர்கள் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தீர்வுக்கு உந்து சக்தியை கொடுக்கின்றார்களா என்றால் இல்லை அரசியல் தீர்வு வேண்டும் என கூறிக்கொண்டே பாராளுமன்ற ஆசனத்தை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்களே தவிர அரசியல் தீர்விற்காக எதுவும் செய்யவில்லை என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்  அரசியல் தலைவர்கள் பேசுவது போல இரண்டு தேசம் ஒரு நாடு என்று அரசியலுக்காக பேசுவதே தவிர தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக்கொடுப்பதற்காக அல்ல. எனவே பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதியாக இருப்பதை விடுத்து ஜனாதிபதியுடன் பேசுங்கள் ஜனாதிபதிக்கு உந்து சக்திகளை கொடுக்க வேண்டும் ஜனாதிபதி அரசியல் தீர்வை முன்வைக்கவில்லை என்று உலகிற்கு எடுத்து காட்ட வேண்டும். அதனை விடுத்து நடக்க முடியாதவைக்காக யதார்த்தத்திற்காக அரசியல் செய்வது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் மாகாண சபையின் கீழ் தான் இன்று அதிகமான பாடசாலைகள் இருக்கின்றது அவற்றினுடைய நிர்வாகம் அவற்றினுடைய ஆசிரியர் நியமனங்கள் தொங்கி நிற்கின்றது. ஜனாதிபதி கூறியது நடைபெற வேண்டுமானால் மாகாணசபை தேர்தல் நடைபெற வேண்டும். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபைக்காக நிர்வாக கமிட்டியை நியமிப்பது முற்றாக தவிர்க்க வேண்டும். இவ்வாறான செயற்பாடானது ஜனநாயக துரோகம் மாகாணங்களுக்காக நிர்வாக கமிட்டிகள் நியமிக்கபடுவதை தமிழ் பிரதிநிதிகள் எதிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement