• Jun 02 2024

படகுகளை திருப்பி அனுப்பும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை : ஆஸ்திரேலியா உறுதி! SamugamMedia

Tamil nila / Feb 17th 2023, 7:29 pm
image

Advertisement

ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாக வசித்து வரும் அகதிகள் தொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள விசா மாற்றம் என்பது எந்த வகையிலும் ஆஸ்திரேலியாவின் கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை மாற்றாது என இலங்கை, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆட்கடத்தல் செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பாலி செயல்முறை கூட்டத்தில் பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிலையில், படகுகளை திருப்பி அனுப்பும் கொள்கை நடைமுறையில் இருப்பதை ஆஸ்திரேலிய அரசு உறுதிப்பட கூறியிருக்கிறது. 


ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசா மற்றும் பாதுகாப்பான புகலிட (Safe-Haven Enterprise) விசாவில் உள்ள 19 ஆயிரம் அகதிகளுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கான வழியை தொழிற்கட்சி அரசாங்கம் ஏற்படுத்துள்ளதால் ஆஸ்திரேலியாவை நோக்கிய அகதிகளின் படகு வருகைகள் அதிகரிக்கும் என முன்பு ஆட்சியிலிருந்த தாராளவாத தேசிய கூட்டணி குற்றஞ்சாட்டுகிறது. 


ஆனால், இந்த மாற்றம் 2013ம் ஆண்டுக்கு முன்பிருந்து ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாக்களில் உள்ள அகதிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனக் கூறியுள்ளது தொழிற்கட்சி அரசாங்கம். 


ஆஸ்திரேலியாவுக்குள் முறையான விசாயின்றி வருபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் உறுதிப்பட தெரிவித்துள்ளனர். 



ஆஸ்திரேலிய அரசு கொண்டு வந்துள்ள விசா மாற்றத்தின் கீழ் அங்கீகரிக்கப்படும் அகதிகளுக்கு சமூக நல உதவிகள், உயர்கல்விக்கான கடன்களை பெறுவதற்கான அனுமதி கிடைக்கும். இதில் ஈராக், ஆப்கானிஸ்தான், ஈரான், மியான்மர், இலங்கையைச் சேர்ந்த அகதிகள் அதிகம் பயன்பெறுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 



படகுகளை திருப்பி அனுப்பும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை : ஆஸ்திரேலியா உறுதி SamugamMedia ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாக வசித்து வரும் அகதிகள் தொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள விசா மாற்றம் என்பது எந்த வகையிலும் ஆஸ்திரேலியாவின் கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை மாற்றாது என இலங்கை, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தல் செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பாலி செயல்முறை கூட்டத்தில் பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிலையில், படகுகளை திருப்பி அனுப்பும் கொள்கை நடைமுறையில் இருப்பதை ஆஸ்திரேலிய அரசு உறுதிப்பட கூறியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசா மற்றும் பாதுகாப்பான புகலிட (Safe-Haven Enterprise) விசாவில் உள்ள 19 ஆயிரம் அகதிகளுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கான வழியை தொழிற்கட்சி அரசாங்கம் ஏற்படுத்துள்ளதால் ஆஸ்திரேலியாவை நோக்கிய அகதிகளின் படகு வருகைகள் அதிகரிக்கும் என முன்பு ஆட்சியிலிருந்த தாராளவாத தேசிய கூட்டணி குற்றஞ்சாட்டுகிறது. ஆனால், இந்த மாற்றம் 2013ம் ஆண்டுக்கு முன்பிருந்து ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாக்களில் உள்ள அகதிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனக் கூறியுள்ளது தொழிற்கட்சி அரசாங்கம். ஆஸ்திரேலியாவுக்குள் முறையான விசாயின்றி வருபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் உறுதிப்பட தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய அரசு கொண்டு வந்துள்ள விசா மாற்றத்தின் கீழ் அங்கீகரிக்கப்படும் அகதிகளுக்கு சமூக நல உதவிகள், உயர்கல்விக்கான கடன்களை பெறுவதற்கான அனுமதி கிடைக்கும். இதில் ஈராக், ஆப்கானிஸ்தான், ஈரான், மியான்மர், இலங்கையைச் சேர்ந்த அகதிகள் அதிகம் பயன்பெறுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement