• Sep 22 2024

நாட்டின் வங்குரோத்து நிலைக்கு அவர்களே காரணம் - ரணில் பகீர்...!samugammedia

Anaath / Nov 13th 2023, 5:17 pm
image

Advertisement

2022 ஆம் ஆண்டைப் போன்று பொருளாதார நரகத்தில் வீழ்ந்துவிடாமல் முன்நோக்கிச் செல்வதற்கு அடித்தளமிட்டுள்ளதாக 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் 

அவர் மேலும் தெரிவிக்கையில் 

அரசியல் நோக்கங்களுக்காக மாயைகளைப் பரப்புவதை நிறுத்துமாறும் அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டை உயர்த்துவதற்கு அனைவரும் தம்மை உண்மையாக அர்ப்பணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்

இந்த கடினமான பாதையில் நாம் தொடர்ந்து பயணித்தால் சிறந்த பொருளாதாரத்தை விரைவில் உருவாக்க முடியும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி கடந்த வருடத்தை திரும்பிப் பார்க்கும் போது நாடு சரியான பாதையில் செல்வது 100 வீதம்   உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் 

மேலும் கற்பனைக் கதைகளால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது எனவும் நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில் தூக்கி நிறுத்த முடிந்ததாகவும் அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும் சில தரப்பினர் நாட்டை பின்நோக்கி இழுக்க முயற்சித்ததாகவும் குறிப்பிட்டார்.

நாட்டின் வங்குரோத்து நிலைக்கு அவர்களே காரணம் - ரணில் பகீர்.samugammedia 2022 ஆம் ஆண்டைப் போன்று பொருளாதார நரகத்தில் வீழ்ந்துவிடாமல் முன்நோக்கிச் செல்வதற்கு அடித்தளமிட்டுள்ளதாக 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில் அரசியல் நோக்கங்களுக்காக மாயைகளைப் பரப்புவதை நிறுத்துமாறும் அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டை உயர்த்துவதற்கு அனைவரும் தம்மை உண்மையாக அர்ப்பணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்இந்த கடினமான பாதையில் நாம் தொடர்ந்து பயணித்தால் சிறந்த பொருளாதாரத்தை விரைவில் உருவாக்க முடியும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி கடந்த வருடத்தை திரும்பிப் பார்க்கும் போது நாடு சரியான பாதையில் செல்வது 100 வீதம்   உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் கற்பனைக் கதைகளால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது எனவும் நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில் தூக்கி நிறுத்த முடிந்ததாகவும் அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும் சில தரப்பினர் நாட்டை பின்நோக்கி இழுக்க முயற்சித்ததாகவும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement