திருகோணமலை மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று திருகோணமலை நகராட்சி மன்ற பிரதான மண்டபத்தில் நேற்றையதினம் மதியம்(04) இடம்பெற்றது.
இதன்போது வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வர ஆலய விவகாரம், மக்களுடைய காணிகள் விடுவிப்பு,மக்கெய்சர் விளையாட்டு அரங்கு தொடர்பான பல பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்துடன் இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட 400 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
திருக்கோணேஸ்வர ஆலய விவகாரம்- ஜனாதிபதியுடன் திருமலை மக்கள் கலந்துரையாடல். திருகோணமலை மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று திருகோணமலை நகராட்சி மன்ற பிரதான மண்டபத்தில் நேற்றையதினம் மதியம்(04) இடம்பெற்றது.இதன்போது வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வர ஆலய விவகாரம், மக்களுடைய காணிகள் விடுவிப்பு,மக்கெய்சர் விளையாட்டு அரங்கு தொடர்பான பல பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.அத்துடன் இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட 400 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.