• May 11 2024

நாங்கள் எதிர்பார்த்ததை விட இவ்வரவு செலவு திட்டம் ஒரு படி மேலானது - அதாஉல்லா எம்.பி. பெருமிதம்...!samugammedia

Tharun / Nov 15th 2023, 8:16 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்க நேற்று முன்தினம் முன்வைத்துள்ள வரவு செலவுத்திட்டமானது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே தயாரிக்கப்பட்டது என  தேசிய  காங்கிரஸ் கட்சி உறுப்பினர் A.L.M.அதாஉல்லா தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

நாங்கள் இந்த பாராளுமன்றத்தில் நிறைய வரவு செலவு திட்டத்தில்  கலந்து இருக்கிறோம். இந்த வரவு செலவு திட்டம் முக்கியமானது. கடந்த காலங்களில் சிலர் எதிரான கருத்துக்களை முன்வைப்பர். ஆனால் இன்றைய காலகட்டமானது பல குழப்பங்கள் நிறைந்த சூழ்நிலையே காணப்படுகிறது. மக்கள் ஒரு நாளும் சந்திக்காத பொருளாதார நெருக்கடியை இம்முறை சந்தித்தனர். குறிப்பாக உணவு பிரச்சினை, பெற்றோல்  பிரச்சினையை   குறிப்பிடலாம். இவ்வாறான நிலையில் நாட்டை யாரும் பொறுப்பெடுக்கவில்லை. இலங்கை மக்கள் மனதில் யார் இந்த நாட்டை பொறுப்பெடுப்பார் என்ற எண்ணமே காணப்பட்டது. 

நாங்கள் இதுவரை பல ஆட்சிகளை கண்டு இருக்கிறோம். ஆனால் இந்த நாட்டை வழிநடத்த ஜனாதிபதி அவர்களுக்கு இந்த நாடு ஒப்படைக்க பட்டத்தை யாரும் மறுத்து விட முடியாது. முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை  மக்கள் எவ்வாறு விரும்பினார்களோ, அதை விட ரணில் விக்கிரமசிங்கவை  விரும்புகின்றனர் காரணம் பொருளாதாரத்தினை அவர் மேம்படுத்துவார் என்ற நம்பிக்கையே ஆகும். இவரால் தான் 2023 வரவு செலவு திட்டத்தில் நாங்கள் பங்கெடுக்கின்றோம். 

ஜனாதிபதி அவர்களின்  வரவு செலவு திட்டமானது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே தயாரிக்கப்பட்டது. நாங்கள் எதிர்பார்த்ததை விட ஒரு படி மேலாக வரவு செலவு திட்டம் காணப்படுகிறது. இதற்கு நான் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகின்றேன். 

நாங்கள் மீள எழுந்து நிற்பதற்குரிய வரவு செலவு திட்டம் இதுவாகும்.  குறைகளை ஒரு புறம் வைத்து விட்டு எங்களின் இலக்கை அடைவதுக்கு வழி என்ன என்பதை நாங்கள் ஆராய வேண்டும்.  பட்ஜெட் மூலமாக நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்கிற இலக்கை நோக்கி நாங்கள் பயணிக்க வேண்டும். 

எமது நாடு நிறைய வளங்கள் உள்ள நாடு. எமது நாட்டு வளத்தை நாங்கள் முறையாக பாவிக்கவில்லை. அதன் உச்ச பயனை நாங்கள் அடையவில்லை. சிறிய பொருட்களை நாங்கள் இறக்குமதி செய்தே நாங்கள் பெற்றுக்கொள்கிறோம். எங்களிடத்தில் பொருளாதார அபிவிருத்தி எண்ணக்கருக்கள் இல்லை. எனவே உற்பத்தி பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும்.  என அவர் மேலும் தெரிவித்துள்ளார் 

நாங்கள் எதிர்பார்த்ததை விட இவ்வரவு செலவு திட்டம் ஒரு படி மேலானது - அதாஉல்லா எம்.பி. பெருமிதம்.samugammedia ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்க நேற்று முன்தினம் முன்வைத்துள்ள வரவு செலவுத்திட்டமானது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே தயாரிக்கப்பட்டது என  தேசிய  காங்கிரஸ் கட்சி உறுப்பினர் A.L.M.அதாஉல்லா தனது கருத்தை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இந்த பாராளுமன்றத்தில் நிறைய வரவு செலவு திட்டத்தில்  கலந்து இருக்கிறோம். இந்த வரவு செலவு திட்டம் முக்கியமானது. கடந்த காலங்களில் சிலர் எதிரான கருத்துக்களை முன்வைப்பர். ஆனால் இன்றைய காலகட்டமானது பல குழப்பங்கள் நிறைந்த சூழ்நிலையே காணப்படுகிறது. மக்கள் ஒரு நாளும் சந்திக்காத பொருளாதார நெருக்கடியை இம்முறை சந்தித்தனர். குறிப்பாக உணவு பிரச்சினை, பெற்றோல்  பிரச்சினையை   குறிப்பிடலாம். இவ்வாறான நிலையில் நாட்டை யாரும் பொறுப்பெடுக்கவில்லை. இலங்கை மக்கள் மனதில் யார் இந்த நாட்டை பொறுப்பெடுப்பார் என்ற எண்ணமே காணப்பட்டது. நாங்கள் இதுவரை பல ஆட்சிகளை கண்டு இருக்கிறோம். ஆனால் இந்த நாட்டை வழிநடத்த ஜனாதிபதி அவர்களுக்கு இந்த நாடு ஒப்படைக்க பட்டத்தை யாரும் மறுத்து விட முடியாது. முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை  மக்கள் எவ்வாறு விரும்பினார்களோ, அதை விட ரணில் விக்கிரமசிங்கவை  விரும்புகின்றனர் காரணம் பொருளாதாரத்தினை அவர் மேம்படுத்துவார் என்ற நம்பிக்கையே ஆகும். இவரால் தான் 2023 வரவு செலவு திட்டத்தில் நாங்கள் பங்கெடுக்கின்றோம். ஜனாதிபதி அவர்களின்  வரவு செலவு திட்டமானது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே தயாரிக்கப்பட்டது. நாங்கள் எதிர்பார்த்ததை விட ஒரு படி மேலாக வரவு செலவு திட்டம் காணப்படுகிறது. இதற்கு நான் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகின்றேன். நாங்கள் மீள எழுந்து நிற்பதற்குரிய வரவு செலவு திட்டம் இதுவாகும்.  குறைகளை ஒரு புறம் வைத்து விட்டு எங்களின் இலக்கை அடைவதுக்கு வழி என்ன என்பதை நாங்கள் ஆராய வேண்டும்.  பட்ஜெட் மூலமாக நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்கிற இலக்கை நோக்கி நாங்கள் பயணிக்க வேண்டும். எமது நாடு நிறைய வளங்கள் உள்ள நாடு. எமது நாட்டு வளத்தை நாங்கள் முறையாக பாவிக்கவில்லை. அதன் உச்ச பயனை நாங்கள் அடையவில்லை. சிறிய பொருட்களை நாங்கள் இறக்குமதி செய்தே நாங்கள் பெற்றுக்கொள்கிறோம். எங்களிடத்தில் பொருளாதார அபிவிருத்தி எண்ணக்கருக்கள் இல்லை. எனவே உற்பத்தி பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும்.  என அவர் மேலும் தெரிவித்துள்ளார் 

Advertisement

Advertisement

Advertisement