• Jan 13 2025

புதியவர்களுக்கு வாக்களித்து பரிசீலித்து பார்ப்பதற்குரிய தருணம் அல்ல இது! - பாரத் அருள்சாமி சுட்டிக்காட்டு

Chithra / Sep 5th 2024, 12:18 pm
image


நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் புதியவர்களுக்கு வாக்களிதது பரிசீலித்து பார்ப்பதற்குரிய தருணம்   இது அல்ல. அவ்வாறு முயற்சித்தால் அது பாதக விளைவுகளை ஏற்படுத்தி மீண்டும் வரிசை யுகம் தோற்றம் பெறலாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து இன்று புஸ்ஸலாவ மற்றும் நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்  

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவரையும் பாதுகாக்கவில்லை. நாட்டையும், நாட்டு மக்களையும்தான் அவர் பாதுகாத்துள்ளார். 

குறுகிய காலப்பதிக்குள் அவர் தலைமையில்தான் ஊழல்களுக்கு எதிராக பல சட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. உரிய சட்ட ஏற்பாடுகள் இருந்தால் எவரும் தப்ப முடியாது. 

அதற்குரிய வழிகளை ஜனாதிபதி சிறப்பாக செய்துள்ளார். எனவே, ஊழல்வாதிகளை பாதுகாப்பார் எனக் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும்.

அடுத்தது புதியவர்களுக்கு வாக்களிதது பரிசீலித்து பார்ப்பதற்குரிய தருணம் அல்ல இது. அவ்வாறு முயற்சித்தால் அது பாதக விளைவுகளை ஏற்படுத்தி மீண்டும் வரிசை யுகம் தோற்றம் பெறலாம். 

தோட்டங்களின் காணி உரிமை அரசு வசம் உள்ளது. கம்பனிகளுக்கு அது குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தமக்குரிய விடயங்களை செய்வதில் சட்டரீதியான தடைகள் உள்ளன.

எனவேதான் தோட்டங்களை கிராமங்களாக்குவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. 

அவ்வாறு செய்துவிட்டு மக்களுக்கு காணி உரிமையை வழங்கிட்டால், தோட்ட நிர்வாகம் தலையிட முடியாது. தமக்குரிய காணியில் மக்கள் எதையும் செய்யலாம். கிராமத்துக்கென தகனசாலை, மைதானம் என ஏனைய கிராமங்களில் உள்ளவாறு எல்லாம் வரும். 

இது சுயாட்சிபோன்றதாகும். எனவே, தோட்டங்களை கிராமங்களாக்கும் திட்டம் பற்றி பரவும் போலி தகவல்களை நம்ப வேண்டாம் -என்றார்.


 

புதியவர்களுக்கு வாக்களித்து பரிசீலித்து பார்ப்பதற்குரிய தருணம் அல்ல இது - பாரத் அருள்சாமி சுட்டிக்காட்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் புதியவர்களுக்கு வாக்களிதது பரிசீலித்து பார்ப்பதற்குரிய தருணம்   இது அல்ல. அவ்வாறு முயற்சித்தால் அது பாதக விளைவுகளை ஏற்படுத்தி மீண்டும் வரிசை யுகம் தோற்றம் பெறலாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து இன்று புஸ்ஸலாவ மற்றும் நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவரையும் பாதுகாக்கவில்லை. நாட்டையும், நாட்டு மக்களையும்தான் அவர் பாதுகாத்துள்ளார். குறுகிய காலப்பதிக்குள் அவர் தலைமையில்தான் ஊழல்களுக்கு எதிராக பல சட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. உரிய சட்ட ஏற்பாடுகள் இருந்தால் எவரும் தப்ப முடியாது. அதற்குரிய வழிகளை ஜனாதிபதி சிறப்பாக செய்துள்ளார். எனவே, ஊழல்வாதிகளை பாதுகாப்பார் எனக் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும்.அடுத்தது புதியவர்களுக்கு வாக்களிதது பரிசீலித்து பார்ப்பதற்குரிய தருணம் அல்ல இது. அவ்வாறு முயற்சித்தால் அது பாதக விளைவுகளை ஏற்படுத்தி மீண்டும் வரிசை யுகம் தோற்றம் பெறலாம். தோட்டங்களின் காணி உரிமை அரசு வசம் உள்ளது. கம்பனிகளுக்கு அது குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தமக்குரிய விடயங்களை செய்வதில் சட்டரீதியான தடைகள் உள்ளன.எனவேதான் தோட்டங்களை கிராமங்களாக்குவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. அவ்வாறு செய்துவிட்டு மக்களுக்கு காணி உரிமையை வழங்கிட்டால், தோட்ட நிர்வாகம் தலையிட முடியாது. தமக்குரிய காணியில் மக்கள் எதையும் செய்யலாம். கிராமத்துக்கென தகனசாலை, மைதானம் என ஏனைய கிராமங்களில் உள்ளவாறு எல்லாம் வரும். இது சுயாட்சிபோன்றதாகும். எனவே, தோட்டங்களை கிராமங்களாக்கும் திட்டம் பற்றி பரவும் போலி தகவல்களை நம்ப வேண்டாம் -என்றார். 

Advertisement

Advertisement

Advertisement