• Sep 20 2024

ஏ.எல் சித்தியடையாதவர்கள் மருத்துவர்களாக கடமையில்- மருத்துவ சங்க பதிவே முக்கியம் - சுரேன் ராகவன் சுட்டிக்காட்டு..!

Sharmi / Aug 28th 2024, 12:38 pm
image

Advertisement

இலங்கையில் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் மருத்துவர்களாக கடமையாற்றுகின்றனர் எனவும் அவர்களுக்கு இலங்கை மருத்துவர் சங்க பதிவே முக்கியம் எனவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவிலும், மன்னாரிலும் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள், வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்கள் என்றும், அவர்கள் இலங்கையில் உயர்தர கல்வியில் சித்தியாகவில்லை எனவும் வட மாகாண சுகாதர திணைக்களத்திடம் தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட அறிக்கையை அடிப்படையாக வைத்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், 

வைத்தியர் ஒருவர் இலங்கை மருத்துவ சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அவருக்கு அனுமதி கிடைத்திருக்க வேண்டும். அவர் எங்கு படித்தார் என்பது எமக்கு கவலையில்லை. அவர் படித்த கல்லூரி உலக புத்தகத்தில் இருக்க வேண்டும்.

உதாரணமாக ரஷ்யாவில் ஒருவர் படிக்கிறார் என்றால், அவர் கற்கும் பல்கலைக்கழகம், உலக பல்கலைக்கழக புத்தகத்தில் உள்ளதாக என்பதே முக்கியம்.

அவருக்கு அனுமதியை நாம் வழங்குவோம். அவர் கற்று திரும்பியதும் இலங்கை மருத்துவர் சங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொண்ட பிறகு ஒரு வருடத்துக்கான பயிற்சி இங்கே வழங்கப்படும்.

அதன் பின்னர்தான் அவர்கள் சேவையாற்ற முடியும். 

உயர்தரம் இருந்ததோ இல்லையோ என்பது இங்கே கேள்வியல்ல. இவர்கள் தரமான கல்வி கற்றார்களா என்பதே முக்கியம்.

உயர்தரம் என்பது எமது நாட்டில் ஒருவரின் வாழக்கையை திசை திருப்பும் ஒரு திருப்பு முனையாக காணப்படுகிறது.

உயர்தத்தில் 3 A எடுத்த கொழும்பு மாவட்ட பிள்ளைகள் பலர் மருத்துவம் படிக்க இயலாமல் காணப்படுகின்றனர். அவர்களுக்கு நாம் என்ன சொல்லப்போகின்றோம் எனவும்  சுரேன் ராகவன் கேள்வி எழுப்பியுள்ளார்.


ஏ.எல் சித்தியடையாதவர்கள் மருத்துவர்களாக கடமையில்- மருத்துவ சங்க பதிவே முக்கியம் - சுரேன் ராகவன் சுட்டிக்காட்டு. இலங்கையில் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் மருத்துவர்களாக கடமையாற்றுகின்றனர் எனவும் அவர்களுக்கு இலங்கை மருத்துவர் சங்க பதிவே முக்கியம் எனவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியாவிலும், மன்னாரிலும் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள், வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்கள் என்றும், அவர்கள் இலங்கையில் உயர்தர கல்வியில் சித்தியாகவில்லை எனவும் வட மாகாண சுகாதர திணைக்களத்திடம் தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட அறிக்கையை அடிப்படையாக வைத்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், வைத்தியர் ஒருவர் இலங்கை மருத்துவ சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவருக்கு அனுமதி கிடைத்திருக்க வேண்டும். அவர் எங்கு படித்தார் என்பது எமக்கு கவலையில்லை. அவர் படித்த கல்லூரி உலக புத்தகத்தில் இருக்க வேண்டும். உதாரணமாக ரஷ்யாவில் ஒருவர் படிக்கிறார் என்றால், அவர் கற்கும் பல்கலைக்கழகம், உலக பல்கலைக்கழக புத்தகத்தில் உள்ளதாக என்பதே முக்கியம். அவருக்கு அனுமதியை நாம் வழங்குவோம். அவர் கற்று திரும்பியதும் இலங்கை மருத்துவர் சங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொண்ட பிறகு ஒரு வருடத்துக்கான பயிற்சி இங்கே வழங்கப்படும். அதன் பின்னர்தான் அவர்கள் சேவையாற்ற முடியும். உயர்தரம் இருந்ததோ இல்லையோ என்பது இங்கே கேள்வியல்ல. இவர்கள் தரமான கல்வி கற்றார்களா என்பதே முக்கியம். உயர்தரம் என்பது எமது நாட்டில் ஒருவரின் வாழக்கையை திசை திருப்பும் ஒரு திருப்பு முனையாக காணப்படுகிறது. உயர்தரத்தில் 3 A எடுத்த கொழும்பு மாவட்ட பிள்ளைகள் பலர் மருத்துவம் படிக்க இயலாமல் காணப்படுகின்றனர். அவர்களுக்கு நாம் என்ன சொல்லப்போகின்றோம் எனவும்  சுரேன் ராகவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement