• Oct 19 2024

வடக்கில் புலிகளின் தங்கத்தை தேடிச் சென்றவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..! samugammedia

Chithra / Apr 25th 2023, 11:06 am
image

Advertisement

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தேடிச் சென்ற  07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குழுவினரிடம், வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட பெறுமதியான பொருட்களை பூமிக்கு அடியில் தேடுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனர் இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

பின்னர் புதுக்குடியிருப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழு ஆனந்தபுரம் பகுதியிலுள்ள வனப்பகுதியில் சோதனை நடத்தி சம்பந்தப்பட்ட குழுவினரை கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது, ​​நிலத்தை தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் பல கருவிகள் மற்றும் கார் ஒன்றும் அவர்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவர் கிளிநொச்சி கொக்கிளாய் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், ஏனைய சந்தேக நபர்கள் அனைவரும் ஜாஎல, நீர்கொழும்பு, வெல்லம்பிட்டி மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் புலிகளின் தங்கத்தை தேடிச் சென்றவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி. samugammedia முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தேடிச் சென்ற  07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட குழுவினரிடம், வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட பெறுமதியான பொருட்களை பூமிக்கு அடியில் தேடுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனர் இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் புதுக்குடியிருப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழு ஆனந்தபுரம் பகுதியிலுள்ள வனப்பகுதியில் சோதனை நடத்தி சம்பந்தப்பட்ட குழுவினரை கைது செய்தனர்.சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது, ​​நிலத்தை தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் பல கருவிகள் மற்றும் கார் ஒன்றும் அவர்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவர் கிளிநொச்சி கொக்கிளாய் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், ஏனைய சந்தேக நபர்கள் அனைவரும் ஜாஎல, நீர்கொழும்பு, வெல்லம்பிட்டி மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement