• Jan 16 2025

கல்வி அமைச்சுக்கு முன் போராட்டிய மேலும் மூவர் கைது

Chithra / Dec 15th 2024, 4:09 pm
image


16,000 பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் தொழிலில் உள்வாங்குமாறு கோரி கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மேலும் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் கடுவெல பதில் நீதவான் டெலனி முனசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மற்றைய நபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக 04 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்வி அமைச்சுக்கு முன் போராட்டிய மேலும் மூவர் கைது 16,000 பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் தொழிலில் உள்வாங்குமாறு கோரி கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மேலும் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் இருவர் கடுவெல பதில் நீதவான் டெலனி முனசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.மற்றைய நபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக 04 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement