• Jan 11 2025

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது!

Tamil nila / Dec 15th 2024, 7:30 pm
image

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 35 பிரதான வீதியில் உள்ள சுண்டிக்குளம் சந்தியில் குறித்த சம்பவம் இடம் பெற்றது. 

விசுவமடு பகுதியிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை நேற்றைய தினம் இரவு வீதி சோதனையில் பொலிசார் ஈடுபட்ட பொழுது தலை கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று சந்தேக நபர்களை மறித்துள்ளனர்.

வீதிச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிசார் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை சோதனை இடுவதற்கு முற்பட்ட பொழுது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தமது கையில் இருந்த கண்ணாடி போத்திலால் தாக்கியுள்ளார். 

இதன் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் மேற்கொண்ட விசாரணை மூலம் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளார். 

இச்சம்பவத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் தடையப் பொருட்களையும் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 35 பிரதான வீதியில் உள்ள சுண்டிக்குளம் சந்தியில் குறித்த சம்பவம் இடம் பெற்றது. விசுவமடு பகுதியிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை நேற்றைய தினம் இரவு வீதி சோதனையில் பொலிசார் ஈடுபட்ட பொழுது தலை கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று சந்தேக நபர்களை மறித்துள்ளனர்.வீதிச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிசார் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை சோதனை இடுவதற்கு முற்பட்ட பொழுது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தமது கையில் இருந்த கண்ணாடி போத்திலால் தாக்கியுள்ளார். இதன் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் மேற்கொண்ட விசாரணை மூலம் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளார். இச்சம்பவத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் தடையப் பொருட்களையும் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement