இன்றைய ராசிபலன் 12.09.2021

91

மேஷராசி அன்பர்களே

இன்றைய நாளில் சந்திராஷ்டமம் இருப்பதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். மருத்துவ செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

ரிஷபராசி அன்பர்களே

இன்றைய நாளில் உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவி கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

மிதுனராசி அன்பர்களே

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் இன்றைய நாளில் எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கடகராசி அன்பர்களே

இன்றைய நாளில் குடும்பத்தில் அடிப்படை வசதியை மேம்படுத்துவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லை குறையும் வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

சிம்மராசி அன்பர்களே

இன்றைய நாளில் பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கன்னிராசி அன்பர்களே

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த இன்றைய நாளில் குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசாங்கத்தாலும் அதிகார பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் அடைவீர்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

துலாராசி அன்பர்களே

இன்றைய நாளில் கணவன் – மனைவிக்குள் அன்னியோனம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். பழைய பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.

விருச்சிகராசி அன்பர்களே

குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

தனுராசி அன்பர்களே

இன்றைய நாளில் திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மகரராசி அன்பர்களே

கடந்த கால சுகமான அனுபவங்களை சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். இன்றைய நாளில் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள் உத்தியோகத்தில் சில நுணக்கங்களை கற்று கொள்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பராசி அன்பர்களே

உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எஇன்றைய நாளில் சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வெற்றி பெறும் நாள்.

மீனராசி அன்பர்களே

இன்றைய நாளில் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: