• Apr 28 2024

கிண்ணியாவில் சுற்றுலா நீதிமன்ற செயற்பாடுகள் ஆரம்பம்!

Sharmi / Dec 1st 2022, 5:48 pm
image

Advertisement

கிண்ணியாவில் முதன் முதலாக சுற்றுலா நீதிமன்ற ஆரம்ப நிகழ்வு இன்று(01) காலை 10.45 மணிக்கு கிண்ணியா துறையடியில் அமைந்துள்ள, நகர சபைக்கு சொந்தமான வாடி வீட்டு கட்டிடத்தில் ஆரம்பமானது.

கிண்ணியா  நகர சபைக்கு சொந்தமான வாடி வீட்டு கட்டிடம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதுடன் .கிண்ணியா  நகர சபை தவிசாளர் மற்றும் கிண்ணியா பிரதேச செயலாளர் இந்த நீதிமன்றம் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கி இருந்தனர் 

கிண்ணியாவுக்கு  நீண்ட கால தேவையாக இருந்த நீதிமன்றம் இன்று கௌரவ நீதிபதி பயாஸ் ராசாக்கினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவர்களோடு கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச் .எம் .கனி, கிண்ணியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சட்டத்தரணிகள் பொதுமக்கள் என பலர்  கலந்து கொண்டனர்.

கிண்ணியா பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட குற்றவியல்( நீதிவான் நீதிமன்றத்துக்கு உட்பட்ட ) வழக்குகள் அனைத்தும் இங்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

இன்றிலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும்  வழக்கு விசாரணைகள்  நடைபெறும்.

சாதாரண குற்றம் செய்தாலும் அதனை வழக்கு விசாரணை செய்து விசாரிக்க திருகோணமலை  நீதிமன்றத்துக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பல கிலோமீட்டர்  தூரம் செல்ல வேண்டிய நிலை இன்று இல்லாமல் போய் உள்ளது.

இவ்வாறான நீதிமன்றங்கள் நிரந்தரமாக இருப்பதோடு அது தொடர்ந்து செயல்படுவதற்கான நடவடிக்கையினையும் எடுக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.

நீதிமன்றத்துக்கான நிரந்தர கட்டடத்துக்கான காணி ஒதுக்கப்பட்டுள்ளது என கிண்ணியா பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

கிண்ணியாவில் சுற்றுலா நீதிமன்ற செயற்பாடுகள் ஆரம்பம் கிண்ணியாவில் முதன் முதலாக சுற்றுலா நீதிமன்ற ஆரம்ப நிகழ்வு இன்று(01) காலை 10.45 மணிக்கு கிண்ணியா துறையடியில் அமைந்துள்ள, நகர சபைக்கு சொந்தமான வாடி வீட்டு கட்டிடத்தில் ஆரம்பமானது.கிண்ணியா  நகர சபைக்கு சொந்தமான வாடி வீட்டு கட்டிடம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதுடன் .கிண்ணியா  நகர சபை தவிசாளர் மற்றும் கிண்ணியா பிரதேச செயலாளர் இந்த நீதிமன்றம் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கி இருந்தனர் கிண்ணியாவுக்கு  நீண்ட கால தேவையாக இருந்த நீதிமன்றம் இன்று கௌரவ நீதிபதி பயாஸ் ராசாக்கினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இவர்களோடு கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச் .எம் .கனி, கிண்ணியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சட்டத்தரணிகள் பொதுமக்கள் என பலர்  கலந்து கொண்டனர்.கிண்ணியா பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட குற்றவியல்( நீதிவான் நீதிமன்றத்துக்கு உட்பட்ட ) வழக்குகள் அனைத்தும் இங்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.இன்றிலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும்  வழக்கு விசாரணைகள்  நடைபெறும்.சாதாரண குற்றம் செய்தாலும் அதனை வழக்கு விசாரணை செய்து விசாரிக்க திருகோணமலை  நீதிமன்றத்துக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பல கிலோமீட்டர்  தூரம் செல்ல வேண்டிய நிலை இன்று இல்லாமல் போய் உள்ளது.இவ்வாறான நீதிமன்றங்கள் நிரந்தரமாக இருப்பதோடு அது தொடர்ந்து செயல்படுவதற்கான நடவடிக்கையினையும் எடுக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.நீதிமன்றத்துக்கான நிரந்தர கட்டடத்துக்கான காணி ஒதுக்கப்பட்டுள்ளது என கிண்ணியா பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement