• Jun 18 2024

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற தொழிற்சந்தை...!samugammedia

Sharmi / Aug 19th 2023, 1:58 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வேலைவாய்ப்பு தொழிற்சந்தை இன்று காலை முதல் இடம்பெற்றுவருகிறது.

தொழிற்சந்தை இன்று மதியம் ஒரு மணி வரை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சர்வதேச புலம்பெயர்வுக்கான அமைப்பின் அனுசரணையில்
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து குறித்த தொழிற்சந்தையை ஏற்பாடு செய்துள்ளன.

500க்கும் மேற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்காக பல்வேறு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு தொழிற்சந்தையில் பங்கேற்றுள்ளன.

கணக்கியல் துறை, காப்புறுதித் துறை, சந்தைப்படுத்தல் துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஹோட்டல் துறை, கணினித்துறை பயிற்சிநெறி, தாதியர் பயிற்சிநெறி, ஆடைத்தொழிற்சாலை, பாதுகாப்புச் சேவை, சுப்பர் மார்க்கெட் மற்றும் தனியார் உற்பத்தி நிறுவனங்கள் ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் தொழிற்சந்தையில் கலந்துகொண்டுள்ளன.

யாழ்ப்பாணத்திலுள்ள வேலை வாய்ப்பற்ற இளையோருக்கு குறித்த தொழிற்சந்தை நல்லதொரு வாய்ப்பாக இருக்கும் என யாழ். மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற தொழிற்சந்தை.samugammedia யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வேலைவாய்ப்பு தொழிற்சந்தை இன்று காலை முதல் இடம்பெற்றுவருகிறது. தொழிற்சந்தை இன்று மதியம் ஒரு மணி வரை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். சர்வதேச புலம்பெயர்வுக்கான அமைப்பின் அனுசரணையில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து குறித்த தொழிற்சந்தையை ஏற்பாடு செய்துள்ளன. 500க்கும் மேற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்காக பல்வேறு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு தொழிற்சந்தையில் பங்கேற்றுள்ளன. கணக்கியல் துறை, காப்புறுதித் துறை, சந்தைப்படுத்தல் துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஹோட்டல் துறை, கணினித்துறை பயிற்சிநெறி, தாதியர் பயிற்சிநெறி, ஆடைத்தொழிற்சாலை, பாதுகாப்புச் சேவை, சுப்பர் மார்க்கெட் மற்றும் தனியார் உற்பத்தி நிறுவனங்கள் ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் தொழிற்சந்தையில் கலந்துகொண்டுள்ளன. யாழ்ப்பாணத்திலுள்ள வேலை வாய்ப்பற்ற இளையோருக்கு குறித்த தொழிற்சந்தை நல்லதொரு வாய்ப்பாக இருக்கும் என யாழ். மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement