பன்னிரு
திருமுறைகளை உலகெங்கும் எடுத்துச் செல்லும் பணியினை மேற்கொண்ட இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்பலவு சச்சிதானந்தனை தமிழக ஆளுநர் ரவி
தலைமையில் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை இந்தியாவில் இடம்பெற்றது.


பன்னிரு திருமுறைகளை 12 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த சச்சிதானந்தன்,
திருமுறைகளில்
கூறப்படும் தத்துவங்கள், வாழ்க்கை வழிகாட்டுதல்கள் உலகெங்கும் வாழும்
மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக ஏறக்குறைய 19 ஆண்டு காலம் இதற்காக
உழைத்தேன்.
திருமுறைகளை
பன்னிரு மொழிகளிலும் திறம்பட மொழிபெயர்த்து இணையதளங்களில் பதிவேற்றம்
செய்யும் செயற்பாடுகளில் 42 பேர் பங்களிப்பாளர்கள் உதவினார்கள்.
தோடுடைய செவியன் எனத் தொடங்கும் தேவாரம், முத்துநல் தாமம் எனத் தொடங்கும் திருவாசகம்,இரண்டுக்கும்
கலைமாமணி பிரியா முரளியின் மாணவிகள் மூவர், சினேகா மகேசன், ஐசுவரியா
இராசகுமாரன், சின்மயி தேவராஜன் அருமையாக நடனமாடினார்கள்.
பத்மஸ்ரீ விருதாளர் பேராசிரியர் சுதாராணியின் மாணவி கலைமாமணி பிரியா முரளி மற்றும்
ஒரு மாணவி கலைமாமணி சசிரேகா பாலசுப்ரமணியன் ஆங்கிலச் சொற்களுக்கும்
தொடர்களுக்கும் இசை வடிவம் கொடுத்து நடன இசை உரை நிகழ்த்தினார்.
கலைமாமணி
சசிரேகா பாலசுப்பிரமணியன். கடந்த 22 ஆண்டுகளாக சென்னையில் நூல்கள்
பதிப்புப் பணியில் என்னோடு சேர்ந்து பயணிப்பவர் கலைமாமணி சசிரேகா
பாலசுப்ரமணியன் ஆகியோருக்கும் ஆளுநர் கௌரவம் அளித்தார் என அவர் மேலும்
தெரிவித்தார்.

