வடக்கு மாகாணம் நெடுந்தீவுக்கு வருகை தருவதாக போக்குவரத்து அமைச்சர் குறிப்பிடுவது முக்கியமானது. அவ்வாறு வருகை தரும் போது அவர் கடற்படையின் படகை பயன்படுத்த கூடாது. பொதுமக்கள் பயன்படுத்தும் படகை பயன்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் போக்குவரத்து அமைச்சரிடம் குறிப்பிட்டார்.
அதேபோல் நெடுந்தீவுக்கு சென்றதன் பின்னர் முச்சக்கர வண்டியை பயன்படுத்த வேண்டும். அப்போது தான் உண்மை பிரச்சினை அவருக்கு விளங்கும்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது எஸ்.ஸ்ரீதரன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன,
யாழ்ப்பாணம், நெடுந்தீவில் உள்ள வீதிகளின் மொத்த நீளம் 14 கிலோமீற்றராக காணப்படுகிறது. காலை மாலை என்ற அடிப்படையில் இரண்டு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.
இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
இவர்கள் எதிர்நோக்கியுள்ள போக்குவரத்து அசௌகரியங்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் தீர்வு வழங்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
இதன்போது எழுந்து கேள்வியெழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன்,
நெடுந்தீவு பிரதேசம் தனித்த தீவாக காணப்படுகிறது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து சுமார் 16 கடல் மைல் தொலைதூரத்தில் இந்த தீவு உள்ளது.
தனியார் மற்றும் அரச பேரூந்து உள்ளடங்களாக இரண்டு பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாக குறிப்பிடுவது தவறானது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஒரு பேரூந்து மாத்திரமே சேவையில் உள்ளது.
அதுவும் 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வழங்கப்பட்ட பேரூந்து. இந்த பேரூந்து பழுதடைந்தால் அன்றைய தினம் அப்பிரதேசத்தின் போக்குவரத்து சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும்.
நெடுந்தீவு பகுதிக்கு ஒற்றை கதவு உள்ள ஒரு பேரூந்தையாவது வழங்குங்கள் என்று பலமுறை வலியுறுத்தியும் இதுவரை அதற்கு தீர்வு கிடைக்கவில்லை. அதேபோல் 14 கிலோமீற்றர் வீதியில் 3 கிலோமீற்றர் வீதிக்கு மாத்திரமே வரலாற்றில் முதல் தடவையாக கொங்றீட் போடப்பட்டுள்ளது என்றார்.
இதற்கு எழுந்து பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன,
நான் கல்வி அமைச்சராக பதவி வகித்த போது நெடுந்தீவுக்கு சென்றேன். ஏனைய மாவட்டங்களின் கல்வி நிலை நெடுந்தீவுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ' மஹிந்தோதய திட்டம்' நெடுந்தீவில் அமுல்படுத்தப்பட்டது.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் கிடைக்கப் பெற்ற பேருந்துகளில் 15 பேரூந்துகள் யாழ்ப்பாணம் டிபோக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆகவே யாழ்ப்பாணம் அபிவிருத்தி குழு கூட்டத்துக்கு வருகை தருவேன். நேரடி கள ஆய்வில் ஈடுபடுவேன் என்றார்.
மீண்டும் எழுந்து கேள்வியெழுப்பிய எஸ்.ஸ்ரீதரன்,
யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந்தீவுக்கு படகு சேவை பலவீனமான நிலையில் உள்ளன. வடதாரகை படகு சேவை கடந்த 4 மாத காலமாக சேவையில் இல்லை. நெடுந்தாரகை படகு சேவை பலவீனமான தன்மையில் உள்ளது. குமுதினி படகு சேவை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆகவே நெடுந்தீவுக்கான படகு சேவை ஆபத்தான நிலையில் உள்ளது. ஆகவே குறிக்கட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு பாதுகாப்பான படகு சேவை நேர அட்டவணையின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு 6 முறையிலான படகு சேவையை முன்னெடுக்க வேண்டும்.
நெடுந்தீவில் சுமார் 5000 பேர் வாழ்கிறார்கள். போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சினைகளால் இப்பிரதேச மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். நான் குறிப்பிடுவது பொய் என்றால் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசீலனுடன் தொடர்புக் கொண்டு பேசுங்கள் என்றார்.
இதற்கு எழுந்து பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன,
பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குறிப்பிட்டது பொய் என்று நான் குறிப்பிடவில்லை. வெகுவிரைவில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவேன். நெடுந்தீவுக்கு செல்வேன் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் என்னுடன் வருகை தரலாம் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், நெடுந்தீவுக்கு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டது முக்கியமானது. அவர் கடற்படையின் படகில் நெடுந்தீவுக்கு செல்ல கூடாது. அப்பிரதேச மக்கள் பயன்படுத்தும் படகில் தான் அமைச்சர் செல்ல வேண்டும். அதேபோல் நெடுந்தீவுக்கு சென்ற பின்னர் முச்சக்கர வண்டி, சிறிய உழவு இயந்திரத்தில் பயணம் செய்ய வேண்டும் என்றார்.
நெடுந்தீவுக்கு வரும் போது பொதுமக்கள் பயன்படுத்தும் படகையே போக்குவரத்து அமைச்சர் பயன்படுத்த வேண்டும் - சிறிதரன் வலியுறுத்தல் வடக்கு மாகாணம் நெடுந்தீவுக்கு வருகை தருவதாக போக்குவரத்து அமைச்சர் குறிப்பிடுவது முக்கியமானது. அவ்வாறு வருகை தரும் போது அவர் கடற்படையின் படகை பயன்படுத்த கூடாது. பொதுமக்கள் பயன்படுத்தும் படகை பயன்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் போக்குவரத்து அமைச்சரிடம் குறிப்பிட்டார்.அதேபோல் நெடுந்தீவுக்கு சென்றதன் பின்னர் முச்சக்கர வண்டியை பயன்படுத்த வேண்டும். அப்போது தான் உண்மை பிரச்சினை அவருக்கு விளங்கும்.பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது எஸ்.ஸ்ரீதரன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன,யாழ்ப்பாணம், நெடுந்தீவில் உள்ள வீதிகளின் மொத்த நீளம் 14 கிலோமீற்றராக காணப்படுகிறது. காலை மாலை என்ற அடிப்படையில் இரண்டு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இவர்கள் எதிர்நோக்கியுள்ள போக்குவரத்து அசௌகரியங்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் தீர்வு வழங்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.இதன்போது எழுந்து கேள்வியெழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன்,நெடுந்தீவு பிரதேசம் தனித்த தீவாக காணப்படுகிறது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து சுமார் 16 கடல் மைல் தொலைதூரத்தில் இந்த தீவு உள்ளது.தனியார் மற்றும் அரச பேரூந்து உள்ளடங்களாக இரண்டு பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாக குறிப்பிடுவது தவறானது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஒரு பேரூந்து மாத்திரமே சேவையில் உள்ளது. அதுவும் 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வழங்கப்பட்ட பேரூந்து. இந்த பேரூந்து பழுதடைந்தால் அன்றைய தினம் அப்பிரதேசத்தின் போக்குவரத்து சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும்.நெடுந்தீவு பகுதிக்கு ஒற்றை கதவு உள்ள ஒரு பேரூந்தையாவது வழங்குங்கள் என்று பலமுறை வலியுறுத்தியும் இதுவரை அதற்கு தீர்வு கிடைக்கவில்லை. அதேபோல் 14 கிலோமீற்றர் வீதியில் 3 கிலோமீற்றர் வீதிக்கு மாத்திரமே வரலாற்றில் முதல் தடவையாக கொங்றீட் போடப்பட்டுள்ளது என்றார்.இதற்கு எழுந்து பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன, நான் கல்வி அமைச்சராக பதவி வகித்த போது நெடுந்தீவுக்கு சென்றேன். ஏனைய மாவட்டங்களின் கல்வி நிலை நெடுந்தீவுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ' மஹிந்தோதய திட்டம்' நெடுந்தீவில் அமுல்படுத்தப்பட்டது.இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் கிடைக்கப் பெற்ற பேருந்துகளில் 15 பேரூந்துகள் யாழ்ப்பாணம் டிபோக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆகவே யாழ்ப்பாணம் அபிவிருத்தி குழு கூட்டத்துக்கு வருகை தருவேன். நேரடி கள ஆய்வில் ஈடுபடுவேன் என்றார்.மீண்டும் எழுந்து கேள்வியெழுப்பிய எஸ்.ஸ்ரீதரன், யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந்தீவுக்கு படகு சேவை பலவீனமான நிலையில் உள்ளன. வடதாரகை படகு சேவை கடந்த 4 மாத காலமாக சேவையில் இல்லை. நெடுந்தாரகை படகு சேவை பலவீனமான தன்மையில் உள்ளது. குமுதினி படகு சேவை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஆகவே நெடுந்தீவுக்கான படகு சேவை ஆபத்தான நிலையில் உள்ளது. ஆகவே குறிக்கட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு பாதுகாப்பான படகு சேவை நேர அட்டவணையின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு 6 முறையிலான படகு சேவையை முன்னெடுக்க வேண்டும்.நெடுந்தீவில் சுமார் 5000 பேர் வாழ்கிறார்கள். போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சினைகளால் இப்பிரதேச மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். நான் குறிப்பிடுவது பொய் என்றால் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசீலனுடன் தொடர்புக் கொண்டு பேசுங்கள் என்றார்.இதற்கு எழுந்து பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குறிப்பிட்டது பொய் என்று நான் குறிப்பிடவில்லை. வெகுவிரைவில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவேன். நெடுந்தீவுக்கு செல்வேன் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் என்னுடன் வருகை தரலாம் என்றார்.இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், நெடுந்தீவுக்கு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டது முக்கியமானது. அவர் கடற்படையின் படகில் நெடுந்தீவுக்கு செல்ல கூடாது. அப்பிரதேச மக்கள் பயன்படுத்தும் படகில் தான் அமைச்சர் செல்ல வேண்டும். அதேபோல் நெடுந்தீவுக்கு சென்ற பின்னர் முச்சக்கர வண்டி, சிறிய உழவு இயந்திரத்தில் பயணம் செய்ய வேண்டும் என்றார்.