• May 18 2024

நாட்டில் ரயில் சேவைகளுக்கு ஏற்பட்ட சிக்கல்!SamugamMedia

Sharmi / Mar 7th 2023, 12:42 pm
image

Advertisement

சாரதிகள் பற்றாக்குறை காரணமாக வார இறுதி நாட்களில் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்ட போதிலும் அலுவலக ரயில்கள் திட்டமிட்டபடி இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சாதிகள் இல்லாததால் நேற்று 24 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

 இரத்துச் செய்யப்பட்ட ரயில் சேவைகளில் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையிலான உதயதேவி ரயிலும் அடங்கும்.

எவ்வாறாயினும், இந்த ரயில் நாளை முதல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 ஜனவரி 1 ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வு அளிக்கும் முடிவுடன் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அந்த நிலையைக் கருத்தில் கொண்டு, ஒய்வு பெற்ற ஓட்டுநர்களை ஒப்பந்த அடிப்படையில் பணிக்கமர்த்துவதற்கான கோரிக்கை ஜனவரி மாதமே பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட போதிலும், அதற்கு ஆணைக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை.

எவ்வாறாயினும், இன்று போக்குவரத்து அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

நாட்டில் ரயில் சேவைகளுக்கு ஏற்பட்ட சிக்கல்SamugamMedia சாரதிகள் பற்றாக்குறை காரணமாக வார இறுதி நாட்களில் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்ட போதிலும் அலுவலக ரயில்கள் திட்டமிட்டபடி இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் சாதிகள் இல்லாததால் நேற்று 24 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இரத்துச் செய்யப்பட்ட ரயில் சேவைகளில் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையிலான உதயதேவி ரயிலும் அடங்கும்.எவ்வாறாயினும், இந்த ரயில் நாளை முதல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஜனவரி 1 ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வு அளிக்கும் முடிவுடன் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிலையைக் கருத்தில் கொண்டு, ஒய்வு பெற்ற ஓட்டுநர்களை ஒப்பந்த அடிப்படையில் பணிக்கமர்த்துவதற்கான கோரிக்கை ஜனவரி மாதமே பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட போதிலும், அதற்கு ஆணைக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை.எவ்வாறாயினும், இன்று போக்குவரத்து அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement