• Sep 08 2024

ஒரு ஆசனத்துடன் பாராளுமன்றம் வந்த கட்சி ஆசனங்களை அதிகரித்துக்கொள்ள முயற்சி! - நாமல் samugammedia

Chithra / Jul 17th 2023, 10:22 pm
image

Advertisement

ஒரு ஆசனத்துடன் பாராளுமன்றத்துக்கு வந்த அரசியல் கட்சி அடுத்த தேர்தலில் ஆசனங்களை அதிகரித்துக்கொள்ள முயற்சிக்கிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதிய லிபரல் வாத கொள்கை நாட்டுக்கும் , மக்களுக்கும் பயனுடையதாக அமைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

றக்குவானை பகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசயல் கட்சிகள் தேர்தல்கள் குறித்து தற்போது தங்களின் நிலைப்பாட்டை குறிப்பிட்டுக் கொள்கின்றன. எந்த தேர்தலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். ஆகவே தேர்தலை வெகுவிரைவில் நடத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.

அரசியல் கட்சிகளுக்குள் மாறுப்பட்ட பல கருத்துகள் தோற்றம் பெற்றுள்ளன.அரசாங்கத்துடன் இருப்போம் என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். எதிர்க்கட்சிக்கு செல்வோம் என பிறிதொரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

அனைத்து அரசியல் கட்சிகளுக்குள் முரண்பாடு காணப்படுகிறது. கட்சித் தலைவர் ஒருபுறம்,உறுப்பினர்கள் மறுபுறம் என்ற நிலை காணப்படுகிறது.இவ்வாறான நிலையில் ஒரு ஆசனத்துடன் பாராளுமன்றத்துக்கு வந்த அரசியல் கட்சி அடுத்த தேர்தலில் ஆசனங்களை அதிகரித்துக் கொள்ள முயற்சிக்கிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதிய லிபரல் வாத கொள்கை நாட்டுக்கும் மக்களுக்கும் பயனுடையதாக அமைய வேண்டும்.

மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி மறுசீரமைப்புக்களை செய்வதால் முன்னேற்றமடைய முடியாது.ஆகவே மறுசீரமைப்புக்கள் மக்களுக்கு சாதகமாக அமைய வேண்டும்.

தேசிய உற்பத்திகளை மேம்படுத்த புதிய செயற்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இறக்குமதியை மாத்திரம் நம்பியிருந்தால் இன்னும் ஓரிரு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் வங்குரோத்து நிலையடைய நேரிடும் என்றார்.


ஒரு ஆசனத்துடன் பாராளுமன்றம் வந்த கட்சி ஆசனங்களை அதிகரித்துக்கொள்ள முயற்சி - நாமல் samugammedia ஒரு ஆசனத்துடன் பாராளுமன்றத்துக்கு வந்த அரசியல் கட்சி அடுத்த தேர்தலில் ஆசனங்களை அதிகரித்துக்கொள்ள முயற்சிக்கிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதிய லிபரல் வாத கொள்கை நாட்டுக்கும் , மக்களுக்கும் பயனுடையதாக அமைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.றக்குவானை பகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் குறிப்பிட்டதாவது,அரசயல் கட்சிகள் தேர்தல்கள் குறித்து தற்போது தங்களின் நிலைப்பாட்டை குறிப்பிட்டுக் கொள்கின்றன. எந்த தேர்தலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். ஆகவே தேர்தலை வெகுவிரைவில் நடத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.அரசியல் கட்சிகளுக்குள் மாறுப்பட்ட பல கருத்துகள் தோற்றம் பெற்றுள்ளன.அரசாங்கத்துடன் இருப்போம் என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். எதிர்க்கட்சிக்கு செல்வோம் என பிறிதொரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.அனைத்து அரசியல் கட்சிகளுக்குள் முரண்பாடு காணப்படுகிறது. கட்சித் தலைவர் ஒருபுறம்,உறுப்பினர்கள் மறுபுறம் என்ற நிலை காணப்படுகிறது.இவ்வாறான நிலையில் ஒரு ஆசனத்துடன் பாராளுமன்றத்துக்கு வந்த அரசியல் கட்சி அடுத்த தேர்தலில் ஆசனங்களை அதிகரித்துக் கொள்ள முயற்சிக்கிறது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதிய லிபரல் வாத கொள்கை நாட்டுக்கும் மக்களுக்கும் பயனுடையதாக அமைய வேண்டும்.மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி மறுசீரமைப்புக்களை செய்வதால் முன்னேற்றமடைய முடியாது.ஆகவே மறுசீரமைப்புக்கள் மக்களுக்கு சாதகமாக அமைய வேண்டும்.தேசிய உற்பத்திகளை மேம்படுத்த புதிய செயற்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இறக்குமதியை மாத்திரம் நம்பியிருந்தால் இன்னும் ஓரிரு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் வங்குரோத்து நிலையடைய நேரிடும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement