• May 18 2024

முல்லைத்தீவின் முக்கிய பகுதியில் சிங்கள மக்களை குடியேற்ற முயற்சி? வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia

Chithra / Aug 7th 2023, 7:09 pm
image

Advertisement

முல்லைத்தீவு - நாயற்று பகுதிக்கு தெற்கே உள்ள புலிபாய்ந்தகல் என்ற இடத்தில் சிங்கள மக்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்விடயம் தொடர்பில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கையில்,

நாயாற்றுக்கு தெற்கே புலிபாய்ந்த கல் என்ற இடத்தில் குடியேறி இருக்கும் சிங்கள மீனவர்களுக்கு கடல் தொழிலுக்கான அனுமதி கடல் தொழில் திணைக்களத்தால் வழங்கப்பட போவதாகவும் சிங்கள மீனவர்கள் தொழில் செய்வதற்கான வாடிகள் அமைக்கும் பொருட்கள் குறித்த கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அப்பகுதியில் இருக்கும் தமிழ் மீனவர்களால்  முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.


குறித்த விடயம் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டதுடன்,  மீனவ பிரதிநிதிகள் சிலரிடம், தொழில் செய்யும் எமது மீனவர்களுடனும் கலந்துரையாடிய போது 

150 படகுகள் வரையில் குடும்பங்களாக இங்கே வந்து தொழில் செய்ய இருப்பதாகவும் வாடிகள் அமைப்பதற்கான பொருட்கள் குறித்த இடத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும்,  சில நாட்களுக்கு முன்னர்  இந்த இடங்களை பௌத்தப்பிக்கு ஒருவரும் தனது குழுவினருடனும் வந்து பார்வையிட்டு சென்றதாகவும் இது ஒரு குடியேற்ற முயற்சி என தெரிவித்தார்கள் . 

இதற்கமைய  இன்றையதினம்  முல்லைத்தீவு  மாவட்ட கடற் தொழில் நீரியல் வள உதவி பணிப்பாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் .



குறித்த கலந்துரையாடலின் போது  அவர் வெலிஓயாவில்  இருக்கும் மீனவர்கள் தாம் படகுமூலம் தொழில் செய்யப்போவதாகவும் நான்கு படகுகளுக்கு புலி வாய்ந்த கல் என்ற  இடத்தில் அனுமதி தரும்படி கோரியுள்ளதாகவும் அத்தோடு குறித்த விடயம் தொடர்பாக  கொழும்பில் கடற்தொழில் அமைச்சில் டிஜிஐ தாம் சந்திக்க செல்வதாகவும் வெலிஓயாவை சேர்ந்த மீனவர்கள் தெரிவித்ததாகவும்  தெரிவித்தார். 

இதற்கமைய குறித்த விடயத்தினால்  எமது மீனவர்களுக்கான இடங்கள் போதாத நிலை பற்றியும் இவ்வாறு குடியேற்ற வாசிகள் என்று ஒவ்வொரு இடமாக கொடுத்துக் கொண்டு போனால் எமது மீனவர்களின் நிலைமை என்ன என்பதையும் இப்படியான திணிப்பை எமது தமிழ் மீனவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் சுட்டி காட்டியதோடு வாடிகள் அமைப்பதற்கான அனுமதி என்பது பிரதேச செயலகத்தினாலேயே வழங்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவாக கூறியுள்ளதாக தெரிவித்தார்.

முல்லைத்தீவின் முக்கிய பகுதியில் சிங்கள மக்களை குடியேற்ற முயற்சி வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia முல்லைத்தீவு - நாயற்று பகுதிக்கு தெற்கே உள்ள புலிபாய்ந்தகல் என்ற இடத்தில் சிங்கள மக்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்விடயம் தொடர்பில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கையில்,நாயாற்றுக்கு தெற்கே புலிபாய்ந்த கல் என்ற இடத்தில் குடியேறி இருக்கும் சிங்கள மீனவர்களுக்கு கடல் தொழிலுக்கான அனுமதி கடல் தொழில் திணைக்களத்தால் வழங்கப்பட போவதாகவும் சிங்கள மீனவர்கள் தொழில் செய்வதற்கான வாடிகள் அமைக்கும் பொருட்கள் குறித்த கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அப்பகுதியில் இருக்கும் தமிழ் மீனவர்களால்  முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.குறித்த விடயம் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டதுடன்,  மீனவ பிரதிநிதிகள் சிலரிடம், தொழில் செய்யும் எமது மீனவர்களுடனும் கலந்துரையாடிய போது 150 படகுகள் வரையில் குடும்பங்களாக இங்கே வந்து தொழில் செய்ய இருப்பதாகவும் வாடிகள் அமைப்பதற்கான பொருட்கள் குறித்த இடத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும்,  சில நாட்களுக்கு முன்னர்  இந்த இடங்களை பௌத்தப்பிக்கு ஒருவரும் தனது குழுவினருடனும் வந்து பார்வையிட்டு சென்றதாகவும் இது ஒரு குடியேற்ற முயற்சி என தெரிவித்தார்கள் . இதற்கமைய  இன்றையதினம்  முல்லைத்தீவு  மாவட்ட கடற் தொழில் நீரியல் வள உதவி பணிப்பாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் .குறித்த கலந்துரையாடலின் போது  அவர் வெலிஓயாவில்  இருக்கும் மீனவர்கள் தாம் படகுமூலம் தொழில் செய்யப்போவதாகவும் நான்கு படகுகளுக்கு புலி வாய்ந்த கல் என்ற  இடத்தில் அனுமதி தரும்படி கோரியுள்ளதாகவும் அத்தோடு குறித்த விடயம் தொடர்பாக  கொழும்பில் கடற்தொழில் அமைச்சில் டிஜிஐ தாம் சந்திக்க செல்வதாகவும் வெலிஓயாவை சேர்ந்த மீனவர்கள் தெரிவித்ததாகவும்  தெரிவித்தார். இதற்கமைய குறித்த விடயத்தினால்  எமது மீனவர்களுக்கான இடங்கள் போதாத நிலை பற்றியும் இவ்வாறு குடியேற்ற வாசிகள் என்று ஒவ்வொரு இடமாக கொடுத்துக் கொண்டு போனால் எமது மீனவர்களின் நிலைமை என்ன என்பதையும் இப்படியான திணிப்பை எமது தமிழ் மீனவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் சுட்டி காட்டியதோடு வாடிகள் அமைப்பதற்கான அனுமதி என்பது பிரதேச செயலகத்தினாலேயே வழங்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவாக கூறியுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement