• May 02 2024

துருக்கி அதிபர் தேர்தல் – வாக்குப்பதிவு தீவிரம்! samugammedia

Tamil nila / May 14th 2023, 2:58 pm
image

Advertisement

துருக்கி தாயீப் எர்டோகன் (69). இவர் 2003ம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சியை செய்து வருகிறார்.

2003ம் ஆண்டு துருக்கி பிரதமரான எர்டோகன் 2014 ஆகஸ்ட் வரை வரை பிரதமராக செயல்பட்டார். துருக்கியில் பிரதமர் பதவி கலைக்கப்பட்டு உச்சபட்ச அதிகாரமாக அதிபர் பதவி கொண்டுவரப்பட்டது.



இதையடுத்து 2014 ஆகஸ்ட் மாதம் எர்டோகன் துருக்கி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல் கடந்த 9 ஆண்டுகளாக எர்டோகன் துருக்கி அதிபராக செயல்பட்டு வருகிறார். ஒட்டுமொத்த அதிகாரமும் தன்வசம் கொண்டுள்ள எர்டோகன் சர்வாதிகாரியாக அறியப்படுகிறார். நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ள துருக்கி மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளது.

இந்நிலையில், துருக்கியில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் எர்டோகன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கிமல் கிலிக்டரொலு என்ற பொதுவேட்பாளரை நிறுத்தியுள்ளனர். கிமல் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் தேர்தலுடன் சேர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான தேர்தலும் இன்று நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெறும் தேர்தலில் யாரேனும் ஒரு வேட்பாளர் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும். அவ்வாறு பெரும்பான்மையை பெறவில்லை என்றால் வரும் 28ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெற்று வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். துருக்கியில் 20 ஆண்டுகள் எர்டோகன் ஆட்சி செய்த நிலையில் இந்த முறை நடைபெறும் தேர்தலில் அவர் தோல்வியடைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கி அதிபர் தேர்தல் – வாக்குப்பதிவு தீவிரம் samugammedia துருக்கி தாயீப் எர்டோகன் (69). இவர் 2003ம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சியை செய்து வருகிறார்.2003ம் ஆண்டு துருக்கி பிரதமரான எர்டோகன் 2014 ஆகஸ்ட் வரை வரை பிரதமராக செயல்பட்டார். துருக்கியில் பிரதமர் பதவி கலைக்கப்பட்டு உச்சபட்ச அதிகாரமாக அதிபர் பதவி கொண்டுவரப்பட்டது.இதையடுத்து 2014 ஆகஸ்ட் மாதம் எர்டோகன் துருக்கி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல் கடந்த 9 ஆண்டுகளாக எர்டோகன் துருக்கி அதிபராக செயல்பட்டு வருகிறார். ஒட்டுமொத்த அதிகாரமும் தன்வசம் கொண்டுள்ள எர்டோகன் சர்வாதிகாரியாக அறியப்படுகிறார். நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ள துருக்கி மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளது.இந்நிலையில், துருக்கியில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் எர்டோகன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கிமல் கிலிக்டரொலு என்ற பொதுவேட்பாளரை நிறுத்தியுள்ளனர். கிமல் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் தேர்தலுடன் சேர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான தேர்தலும் இன்று நடைபெற்று வருகிறது.இன்று நடைபெறும் தேர்தலில் யாரேனும் ஒரு வேட்பாளர் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும். அவ்வாறு பெரும்பான்மையை பெறவில்லை என்றால் வரும் 28ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெற்று வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். துருக்கியில் 20 ஆண்டுகள் எர்டோகன் ஆட்சி செய்த நிலையில் இந்த முறை நடைபெறும் தேர்தலில் அவர் தோல்வியடைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement