15 வயது சிறுமியின் வயிற்றில் இரட்டை குழந்தைகள்

217

15 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 21 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாலிஎல, பனாகன்னிய பகுதியை சேர்ந்த குறித்த சிறுமி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த சிறுமி 5 மாத கால கர்ப்பிணி என தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த சிறுமியின் வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

கர்ப்பத்திற்கு காரணமான இனைஞரை சிறுமி அடையாளம் காட்டியதன் அடிப்படையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.