உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் மேலும் இருவர் கைது

108

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலும் இருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது குழுவுக்கு உதவியமை, அடிப்படைவாத சிந்தனையை பரப்பியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் முகரியாவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய உதவி தபாலதிபர் ஒருவரும், மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள 35 வயதுடைய கைதி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதைனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: