• Nov 25 2024

காதலால் வந்த விபரீதம் - பாடசாலை மாணவிகள் இருவர் எடுத்த விபரீத முடிவு

Chithra / Nov 24th 2024, 2:48 pm
image

  

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவி ஒருவர் உயிர்மாய்த்து கொண்டுள்ளார்.

குறித்த மாணவி நேற்று (23) பிற்பகல் மற்றுமொரு நண்பியுடன் நீர்த்தேக்கத்தில் குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீரில் மூழ்கிய இரு மாணவிகளில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளதுடன், காணாமல் போன மற்றைய மாணவியின் சடலம் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தெல்தெனிய, புடலுஉயன பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவி தனது தோழியின் கையைப் பிடித்தவாறு நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிர் பிழைத்த மாணவி தற்போது கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள நிலையில், தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த மாணவி தனது காதலுக்கு பிரதேசவாசிகள் மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொண்டதாக அவர் எழுதிய கடிதத்தின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காதலால் வந்த விபரீதம் - பாடசாலை மாணவிகள் இருவர் எடுத்த விபரீத முடிவு   விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவி ஒருவர் உயிர்மாய்த்து கொண்டுள்ளார்.குறித்த மாணவி நேற்று (23) பிற்பகல் மற்றுமொரு நண்பியுடன் நீர்த்தேக்கத்தில் குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நீரில் மூழ்கிய இரு மாணவிகளில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளதுடன், காணாமல் போன மற்றைய மாணவியின் சடலம் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.தெல்தெனிய, புடலுஉயன பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த மாணவி தனது தோழியின் கையைப் பிடித்தவாறு நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிர் பிழைத்த மாணவி தற்போது கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள நிலையில், தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்த மாணவி தனது காதலுக்கு பிரதேசவாசிகள் மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொண்டதாக அவர் எழுதிய கடிதத்தின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement