• Jun 02 2024

இரண்டு வயது குழந்தை மீது பாலியல் சேட்டை : கம்பி எண்ண வைத்த பொலிஸார்!

Tamil nila / Dec 29th 2022, 5:50 pm
image

Advertisement

இரண்டு  வயது 8 மாதங்களேயான பெண் குழந்தையான சித்தியின் மகளுக்கு பாலியல் சேஷ்டை விட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.


இச்சம்பவம், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.


இந்நிலையில், குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 19 வயது இளைஞனை ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று உத்தரவிட்டார்.



குறித்த இளைஞன், சித்தியின் வீட்டில் தங்கி வாழ்ந்துவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சித்தியின் பெண் குழந்தையை தனது மடியில் வைத்து கையடக்க தொலைபேசியில் ஆபாசபடங்களை காண்பித்து பாலியல் சேஷ்டையையும் விட்டுள்ளார்.


இதனை அவதானித்த உறவினரான பெண்ணொருவர் , குழந்தையின் தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


மேலும் பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


இரண்டு வயது குழந்தை மீது பாலியல் சேட்டை : கம்பி எண்ண வைத்த பொலிஸார் இரண்டு  வயது 8 மாதங்களேயான பெண் குழந்தையான சித்தியின் மகளுக்கு பாலியல் சேஷ்டை விட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.இந்நிலையில், குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 19 வயது இளைஞனை ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று உத்தரவிட்டார்.குறித்த இளைஞன், சித்தியின் வீட்டில் தங்கி வாழ்ந்துவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சித்தியின் பெண் குழந்தையை தனது மடியில் வைத்து கையடக்க தொலைபேசியில் ஆபாசபடங்களை காண்பித்து பாலியல் சேஷ்டையையும் விட்டுள்ளார்.இதனை அவதானித்த உறவினரான பெண்ணொருவர் , குழந்தையின் தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.மேலும் பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement