குருணாகல் – வெல்லவ, ஹதிரவலான பகுதியில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் நேற்று (19) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த 18 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இருவரின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன இரு இளம் உயிர்கள் – ரயில் கடவையில் நடந்த கோரம் குருணாகல் – வெல்லவ, ஹதிரவலான பகுதியில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் நேற்று (19) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த 18 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த இருவரின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.