• Oct 05 2024

ருமேனியா, மால்டோவா மேல் பறந்த 2 அதிபயங்கர ரஷ்ய ஏவுகணைகள்: உக்ரைன் எச்சரிக்கை!

Tamil nila / Feb 10th 2023, 8:35 pm
image

Advertisement

ரஷ்யாவின் 2 ராணுவ ஏவுகணைகள் ருமேனியா மற்றும் மால்டோவா-வை கடந்து சென்றதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.


வெள்ளிக்கிழமையான இன்று ரஷ்யாவின் ராணுவ ஏவுகணைகள் இரண்டு உக்ரைனுக்குள் நுழைவதற்கு முன் ரோமானியா மற்றும் மால்டோவன் ஆகிய நாடுகளின்  வான்வெளிக்குள் நுழைந்ததாக உக்ரைனிய உயர்மட்ட ஜெனரல் தெரிவித்துள்ளார்.


உக்ரைனின் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி வலேரி ஜலுஷ்னி வெளியிட்ட தகவலில், கருங்கடலில் இருந்து ஏவப்பட்ட இந்த இரண்டு காலிபர் ஏவுகணைகள் உக்ரைனுக்குள் நுழைவதற்கு முன்பு மால்டோவன் வான்வெளியில் நுழைந்து, பின் ருமேனிய வான்வெளியில் பறந்ததாக தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக உக்ரைனின் செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாக உக்ரைன்ஸ்கா பிராவ்டா ஊடகம் வெளியிட்ட தகவலில், அத்துமீறி நுழைந்த ரஷ்ய ராணுவ ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் திறன் உக்ரைனிடம் உள்ளது, ஆனால் வெளிநாடுகளில் உள்ள பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அந்த திட்டத்தை உக்ரைன் கைவிட்டதாக குறிப்பிட்டுள்ளது.


ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் ஒராண்டை எட்டி இருக்கும் நிலையில், ஆயுத உதவி கோரி உக்ரைனிய ஜனாதிபதி ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இதற்கிடையில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் சுற்றுப் பயணத்தின் மூலம் உக்ரைனுக்கு புதிய சுற்று ஆயுதங்கள் எதுவும்  வழங்கப்பட்டால் போர் தீவிரமடையும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.   

ருமேனியா, மால்டோவா மேல் பறந்த 2 அதிபயங்கர ரஷ்ய ஏவுகணைகள்: உக்ரைன் எச்சரிக்கை ரஷ்யாவின் 2 ராணுவ ஏவுகணைகள் ருமேனியா மற்றும் மால்டோவா-வை கடந்து சென்றதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.வெள்ளிக்கிழமையான இன்று ரஷ்யாவின் ராணுவ ஏவுகணைகள் இரண்டு உக்ரைனுக்குள் நுழைவதற்கு முன் ரோமானியா மற்றும் மால்டோவன் ஆகிய நாடுகளின்  வான்வெளிக்குள் நுழைந்ததாக உக்ரைனிய உயர்மட்ட ஜெனரல் தெரிவித்துள்ளார்.உக்ரைனின் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி வலேரி ஜலுஷ்னி வெளியிட்ட தகவலில், கருங்கடலில் இருந்து ஏவப்பட்ட இந்த இரண்டு காலிபர் ஏவுகணைகள் உக்ரைனுக்குள் நுழைவதற்கு முன்பு மால்டோவன் வான்வெளியில் நுழைந்து, பின் ருமேனிய வான்வெளியில் பறந்ததாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக உக்ரைனின் செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாக உக்ரைன்ஸ்கா பிராவ்டா ஊடகம் வெளியிட்ட தகவலில், அத்துமீறி நுழைந்த ரஷ்ய ராணுவ ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் திறன் உக்ரைனிடம் உள்ளது, ஆனால் வெளிநாடுகளில் உள்ள பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அந்த திட்டத்தை உக்ரைன் கைவிட்டதாக குறிப்பிட்டுள்ளது.ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் ஒராண்டை எட்டி இருக்கும் நிலையில், ஆயுத உதவி கோரி உக்ரைனிய ஜனாதிபதி ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இதற்கிடையில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் சுற்றுப் பயணத்தின் மூலம் உக்ரைனுக்கு புதிய சுற்று ஆயுதங்கள் எதுவும்  வழங்கப்பட்டால் போர் தீவிரமடையும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.   

Advertisement

Advertisement

Advertisement