• Sep 22 2024

ஜ.நா உயர்ஸ்தானிகரின் வாய்மொழி மூல அறிக்கை, இலங்கைக்கொரு முன்னெச்சரிக்கை – சுமந்திரன் சிவப்பு எச்சரிக்கை.! samugammedia

Tamil nila / Jun 25th 2023, 5:32 pm
image

Advertisement

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் வெளியிட்டுள்ள வாய்மூலமான அறிக்கையானது, மிகக் காட்டமானதாக வெளிவந்துள்ள நிலையில் அதனை முழுமையாக வரவேற்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக பொறுப்புக்கூறலை தவிர்த்து வருகின்ற நிலையானது, ஒரு சிவப்பு எச்சரிக்கையாக அமைந்துள்ள ஐ.நா. உயர்ஸ்தானிகர் அறிவித்துள்ள அறிக்கை தொடர்பாக எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருப்பதையும், அது நீக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை வாய்மூல அறிக்கையில், தமிழ் கட்சிகளுடன் பேச்சுக்கள் நடைபெறுகின்றபோதும் அதில் திருப்திகரமான நிலைமைகளை அடைவதற்கு அரசாங்கம் போதியளவில் அர்ப்பணிப்பினை வெளிப்படுத்தவில்லை என்பதும், காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளபோதும், அவை திருப்திகரமான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தள்ளார்.

அடுத்த கூட்டத்தொடரில் எழுத்துமூலமான அறிக்கையில் அதன் பிரதிபலிப்புக்களை அரசாங்கம் உணர்ந்துகொள்ளும் என தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், உயர்ஸ்தானிகரின் வாய்மொழி மூலமான அறிக்கையை முன்னெச்சரிக்கையாகக் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஜ.நா உயர்ஸ்தானிகரின் வாய்மொழி மூல அறிக்கை, இலங்கைக்கொரு முன்னெச்சரிக்கை – சுமந்திரன் சிவப்பு எச்சரிக்கை. samugammedia ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் வெளியிட்டுள்ள வாய்மூலமான அறிக்கையானது, மிகக் காட்டமானதாக வெளிவந்துள்ள நிலையில் அதனை முழுமையாக வரவேற்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக பொறுப்புக்கூறலை தவிர்த்து வருகின்ற நிலையானது, ஒரு சிவப்பு எச்சரிக்கையாக அமைந்துள்ள ஐ.நா. உயர்ஸ்தானிகர் அறிவித்துள்ள அறிக்கை தொடர்பாக எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருப்பதையும், அது நீக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.இதேவேளை வாய்மூல அறிக்கையில், தமிழ் கட்சிகளுடன் பேச்சுக்கள் நடைபெறுகின்றபோதும் அதில் திருப்திகரமான நிலைமைகளை அடைவதற்கு அரசாங்கம் போதியளவில் அர்ப்பணிப்பினை வெளிப்படுத்தவில்லை என்பதும், காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளபோதும், அவை திருப்திகரமான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தள்ளார்.அடுத்த கூட்டத்தொடரில் எழுத்துமூலமான அறிக்கையில் அதன் பிரதிபலிப்புக்களை அரசாங்கம் உணர்ந்துகொள்ளும் என தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், உயர்ஸ்தானிகரின் வாய்மொழி மூலமான அறிக்கையை முன்னெச்சரிக்கையாகக் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement