• Nov 26 2024

அருட்சகோதரியின் அடியை தாங்க முடியாமல் பொலிஸில் சரணடைந்த 11 மாணவிகள்! யாழில் அதிர்ச்சி சம்பவம்

Chithra / May 28th 2024, 2:19 pm
image


யாழ்ப்பாணம், தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரியொருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல், 11 பாடசாலை மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

ஊர்காவற்றுறை - கரம்பன் பகுதியிலுள்ள பெண்கள் பாடசாசலையொன்றின் விடுதியில் தங்கியிருந்த 10 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவிகளே இவ்வாறு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

குறித்த விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கடந்த 3 வருடங்களாக அகப்பை காம்பு, தடி, தலைமுடியை பிடித்து சுவருடன் தாக்குவதென  தம்மை சித்திரவதை செய்தார் என மாணவிகள் கண்ணீருடன் முறையிட்டுள்ளனர்.

ஆங்கில உச்சரிப்பு தவறு, ஆங்கிலம் முறையாக பேசாதது, பிரார்த்தனையை முறையாக மனனம் செய்யாதது உள்ளிட்ட காரணங்களிற்காகவே அருட்சகோதரி தாக்குதல் நடத்தியதாக மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், தம்மை கெட்ட வார்த்தைகளால் திட்டுவதாகவும்  மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை பொலிசாரால், குறித்த 11 மாணவிகளும் இன்று  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசலை சட்டவைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டனர். 

மாணவிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்களின் உடலில் தாக்கப்பட்ட தழும்புகள் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரம் உறுதி செய்யப்பட்டுள்ளJ.

இந் நிலையில் குறித்த விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரியை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அருட்சகோதரியின் அடியை தாங்க முடியாமல் பொலிஸில் சரணடைந்த 11 மாணவிகள் யாழில் அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணம், தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரியொருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல், 11 பாடசாலை மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.ஊர்காவற்றுறை - கரம்பன் பகுதியிலுள்ள பெண்கள் பாடசாசலையொன்றின் விடுதியில் தங்கியிருந்த 10 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவிகளே இவ்வாறு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.குறித்த விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கடந்த 3 வருடங்களாக அகப்பை காம்பு, தடி, தலைமுடியை பிடித்து சுவருடன் தாக்குவதென  தம்மை சித்திரவதை செய்தார் என மாணவிகள் கண்ணீருடன் முறையிட்டுள்ளனர்.ஆங்கில உச்சரிப்பு தவறு, ஆங்கிலம் முறையாக பேசாதது, பிரார்த்தனையை முறையாக மனனம் செய்யாதது உள்ளிட்ட காரணங்களிற்காகவே அருட்சகோதரி தாக்குதல் நடத்தியதாக மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர்.அத்துடன், தம்மை கெட்ட வார்த்தைகளால் திட்டுவதாகவும்  மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர்.ஊர்காவற்றுறை பொலிசாரால், குறித்த 11 மாணவிகளும் இன்று  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசலை சட்டவைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டனர். மாணவிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்களின் உடலில் தாக்கப்பட்ட தழும்புகள் அவதானிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரம் உறுதி செய்யப்பட்டுள்ளJ.இந் நிலையில் குறித்த விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரியை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement