எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டேன் எனவும் எதிர்வரும் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக வாக்குகளை சங்கு சின்னத்துக்கு வழங்க வேண்டும் என தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேந்திரன் தெரிவித்தார் .
யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்(18) ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்னும் இரண்டு தினங்களில் தேர்தல் இடம்பெறுகின்றது. தெளிவாக நாம் மக்களிடம் எமது நிலைப்பாட்டை தெளிவு படுத்தியுள்ளோம். தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயம் என்பது சங்கு சின்னத்துக்கு தனியான வாக்கினை அளிப்பதாகும் .
இது ஒரு வரலாற்று கடமை .இதுவரை காலமும் இலங்கை வரலாற்றில் தெற்காசிய வரலாற்றில் வெற்ற பெறுமுடியாத நிலையில் தமிழ் தேசிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நமக்காக நாம் என பிரசார பணிகளை ஆரம்பித்திருந்தேன் .
அதே போல பல தொண்டர்கள் தமிழ் தேசிய பற்றாளர்கள் அதனைவிட திரும்பவும் எங்களுடன் பல கட்சிகள் இணௌந்துள்ளார்கள். என்றும் இல்லாத எழுச்சி இடம்பெறுகின்றது. ஊடகவியலாளர்களை பாராட்ட வேண்டியுள்ளது.
தமிழ் ஊடகவியலாளருக்கு எனது வாழ்த்துக்கள். இன்று நள்ளிரவுடன் பிரசாரம் முடிந்த பின் பல வதந்திகள் , துண்டுகள் வரலாம். எனது பெயரை பயன்படுத்தி வதந்திகள் வருமாக இருந்தால் பொதுமக்கள் தெளிவாக இருக்கவேண்டும்.
மேலும் 20 ஆம் திகதி இரவு வரை பொதுமக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் எக்காரணம் கொண்டும் நான் விலை போகமாட்டேன்.
வடகிழக்கை மையப்படுத்தி பிரசார பணிகள் முன்னெடுக்கபட்டிருந்தாலும் இன்று தென் பகுதியிலும் தமிழ் மக்கள் வருமாறு கேட்கின்றனர். வடகிழக்கு மக்களுக்கு மேலாக தமிழ் உறவுகள் எமது வாக்கினை அளியுங்கள் .
ஜனாதிபதி தேர்தலின் பின்பு நான் ஏற்கனவே எடுத்த தீர்மானத்திற்கு அமைய நான் பாராளுமன்ற தேர்தல் கேட்க போவதில்லை .நான் இப்பொழுதும் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராக தான் இருந்த வருகின்றேன். 22 ஆம் திகதி க்கு பிறகுதான் தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் அடுத்த நடவடிக்கைகள் தெரியும்.
எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக ஊடகங்களில்தான் கடிதம் பார்த்தேன். மட்டக்களப்பு எம்.பி சாணக்கியன் , யாழ் எம்பி சுமந்திரன் ஆகியோர் இது குறித்து எதிரான மனநிலையை கொண்டிருப்பதாத தெரிவிக்கப்பட்டது.
இரண்டு எம்.எஸ்.டி பாதுகாப்பு எனக்கு கட்டாயமாக வழங்கப்பட்டது. எனக்கு ஏற்கனவே விண்ணப்பம் தரப்படிருந்தது.
இருந்தும் எனக்கு பாதுகாப்பு தேவையில்லை என நான் நிராகரித்தேன். இருந்தும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுமந்திரன் சாணக்கியன் ஆகியோரால் எனக்கு அச்சுறுத்தல் ஏற்படமுடியாது .இது புலனாய்வு தகவல் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இவர்களை விட வேறு கட்சியில் பலர் உள்ளனர்.
இலங்கை தமிழரசு கட்சி உத்தியோகபூர்வமாக இந்த முடிவினை எடுக்கவில்லை .அவ்வாறு காண்பிக்கப்படுகிறது.மூன்று கூட்டங்களில் இறுதியாக அவசர அவசரமாக கூட்டப்பட்ட கூட்டத்தில் சித்திக்கு ஆதரவினை வழங்கியிருந்தார்.இலங்கை தமிழரசு கட்சியின் 90 சதிவிகிதமான உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளர் குறித்த ஆதரவினை தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும் ரணில் விக்கிரமசிங்கவுடன் உங்களுக்கு இருக்கும் டீல் மூலமே தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சுமந்திரன் கருத்து தெரிவித்துள்ளார் இது குறித்து தங்களுடைய கருத்து என்ன என வினவிய பொழுது என்னை விட சுமந்திரனே ரணிலுடன் நல்ல நண்பர் அவரை தான் கேட்கவேண்டும் .ஆனால் சுமந்திரன் அப்படிபட்டவர் அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல் களத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை- யாழில் அரியநேந்திரன் சூளுரை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டேன் எனவும் எதிர்வரும் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக வாக்குகளை சங்கு சின்னத்துக்கு வழங்க வேண்டும் என தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேந்திரன் தெரிவித்தார் .யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்(18) ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,இன்னும் இரண்டு தினங்களில் தேர்தல் இடம்பெறுகின்றது. தெளிவாக நாம் மக்களிடம் எமது நிலைப்பாட்டை தெளிவு படுத்தியுள்ளோம். தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயம் என்பது சங்கு சின்னத்துக்கு தனியான வாக்கினை அளிப்பதாகும் .இது ஒரு வரலாற்று கடமை .இதுவரை காலமும் இலங்கை வரலாற்றில் தெற்காசிய வரலாற்றில் வெற்ற பெறுமுடியாத நிலையில் தமிழ் தேசிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.கடந்த ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நமக்காக நாம் என பிரசார பணிகளை ஆரம்பித்திருந்தேன் .அதே போல பல தொண்டர்கள் தமிழ் தேசிய பற்றாளர்கள் அதனைவிட திரும்பவும் எங்களுடன் பல கட்சிகள் இணௌந்துள்ளார்கள். என்றும் இல்லாத எழுச்சி இடம்பெறுகின்றது. ஊடகவியலாளர்களை பாராட்ட வேண்டியுள்ளது.தமிழ் ஊடகவியலாளருக்கு எனது வாழ்த்துக்கள். இன்று நள்ளிரவுடன் பிரசாரம் முடிந்த பின் பல வதந்திகள் , துண்டுகள் வரலாம். எனது பெயரை பயன்படுத்தி வதந்திகள் வருமாக இருந்தால் பொதுமக்கள் தெளிவாக இருக்கவேண்டும். மேலும் 20 ஆம் திகதி இரவு வரை பொதுமக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் எக்காரணம் கொண்டும் நான் விலை போகமாட்டேன். வடகிழக்கை மையப்படுத்தி பிரசார பணிகள் முன்னெடுக்கபட்டிருந்தாலும் இன்று தென் பகுதியிலும் தமிழ் மக்கள் வருமாறு கேட்கின்றனர். வடகிழக்கு மக்களுக்கு மேலாக தமிழ் உறவுகள் எமது வாக்கினை அளியுங்கள் .ஜனாதிபதி தேர்தலின் பின்பு நான் ஏற்கனவே எடுத்த தீர்மானத்திற்கு அமைய நான் பாராளுமன்ற தேர்தல் கேட்க போவதில்லை .நான் இப்பொழுதும் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராக தான் இருந்த வருகின்றேன். 22 ஆம் திகதி க்கு பிறகுதான் தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் அடுத்த நடவடிக்கைகள் தெரியும்.எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக ஊடகங்களில்தான் கடிதம் பார்த்தேன். மட்டக்களப்பு எம்.பி சாணக்கியன் , யாழ் எம்பி சுமந்திரன் ஆகியோர் இது குறித்து எதிரான மனநிலையை கொண்டிருப்பதாத தெரிவிக்கப்பட்டது.இரண்டு எம்.எஸ்.டி பாதுகாப்பு எனக்கு கட்டாயமாக வழங்கப்பட்டது. எனக்கு ஏற்கனவே விண்ணப்பம் தரப்படிருந்தது. இருந்தும் எனக்கு பாதுகாப்பு தேவையில்லை என நான் நிராகரித்தேன். இருந்தும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.சுமந்திரன் சாணக்கியன் ஆகியோரால் எனக்கு அச்சுறுத்தல் ஏற்படமுடியாது .இது புலனாய்வு தகவல் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இவர்களை விட வேறு கட்சியில் பலர் உள்ளனர். இலங்கை தமிழரசு கட்சி உத்தியோகபூர்வமாக இந்த முடிவினை எடுக்கவில்லை .அவ்வாறு காண்பிக்கப்படுகிறது.மூன்று கூட்டங்களில் இறுதியாக அவசர அவசரமாக கூட்டப்பட்ட கூட்டத்தில் சித்திக்கு ஆதரவினை வழங்கியிருந்தார்.இலங்கை தமிழரசு கட்சியின் 90 சதிவிகிதமான உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளர் குறித்த ஆதரவினை தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும் ரணில் விக்கிரமசிங்கவுடன் உங்களுக்கு இருக்கும் டீல் மூலமே தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சுமந்திரன் கருத்து தெரிவித்துள்ளார் இது குறித்து தங்களுடைய கருத்து என்ன என வினவிய பொழுது என்னை விட சுமந்திரனே ரணிலுடன் நல்ல நண்பர் அவரை தான் கேட்கவேண்டும் .ஆனால் சுமந்திரன் அப்படிபட்டவர் அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.