இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன சந்தித்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் தொலைபேசி மூலம் சிறிது நேரம் கலந்துரையாடலில் இணைந்துள்ளார்.
குறித்த சந்திப்பு இன்றையதினம் சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஏறக்குறைய ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் இளைஞர்களுக்கான சிறந்த நாட்டை உருவாக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பங்களிப்பு குறித்தும் பேசப்பட்டுள்ளது.
மேலும், இங்கு அமெரிக்கா உடனான உறவை மேலும் வலுப்படுத்திக் கொண்டு எவ்வாறு முன்னேறுவது என்பது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன சந்தித்துள்ளார்.இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் தொலைபேசி மூலம் சிறிது நேரம் கலந்துரையாடலில் இணைந்துள்ளார்.குறித்த சந்திப்பு இன்றையதினம் சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.ஏறக்குறைய ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.அத்துடன், நாட்டின் இளைஞர்களுக்கான சிறந்த நாட்டை உருவாக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பங்களிப்பு குறித்தும் பேசப்பட்டுள்ளது.மேலும், இங்கு அமெரிக்கா உடனான உறவை மேலும் வலுப்படுத்திக் கொண்டு எவ்வாறு முன்னேறுவது என்பது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.