• Sep 21 2024

அடங்காத வெள்ளம்! 300 கோடி ரூபாவை இழந்தது அக்குறணை பிரதேசம்!!

crownson / Dec 28th 2022, 9:15 am
image

Advertisement

பிங்கா ஓயா பெருக்கெடுத்ததால் பெரிதும் பாதிக்கப்பட்ட அக்குறணை நகரில், வெள்ளப் பெருக்கு காரணமாக ஏற்பட்ட பொருட்சேதம் 300 கோடி ரூபாவைத் தாண்டுவதாக அக்குறணை பிரதேச செயலாளருக்கு வர்த்தக சமூகம் அறிவித்துள்ளது.

இவ்வாறு ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக அம்பத்தென்ன முதல் அக்குறணை 7ம் மைல் கல் வரை சுமார் 340 வீடுகள் மற்றும் வியாபார நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக அக்குறணை பிரதேச செயலாளர் திருமதி இந்திகா அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அம்பேதன்ன முதல் அக்குறணை 07 தபால் நிலையம் வரை புகையிரதத்திற்கு அருகில் 340 வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கு ஏற்பட்ட இழப்பை மதிப்பிடுவதற்கு அரசாங்கத்தால் ஐந்து குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொல்கொல்லை நீர்த்தேக்கத்தின் மூலமாகவும் பிங்கா ஓயா மூலமாகவும் சேர்ந்திருக்கும் வண்டல் மண் காரணமாகவே, பிங்கா ஓயா ஊடாக வரும் நீரோடை நிரம்பி வழிவதற்கு முக்கிய காரணம் என இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இந்த வண்டல் மண்ணை விரைவில் அகற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக பிரதான மின்விநியோக கம்பம் சரிந்து வீழ்ந்து, நீர்விநியோகக் குழாய் வெடித்திருந்ததால், அக்குறணை நகரின் பல இடங்களில் நீர் மற்றும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டிருந்தது.

நேற்று காலை திருத்தப் பணிகள் பூர்த்தியாகி, விநியோகம் சீர்செய்யப்பட்டிருக்கிறது.

வெள்ளத்தால் சேறு படிந்த வீதிகளையும், கட்டடங்களையும் சுத்தப்படுத்தி வருவதாக அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் மொஹம்மட் இஸ்திஹார் தெரிவித்துள்ளார்.

அடங்காத வெள்ளம் 300 கோடி ரூபாவை இழந்தது அக்குறணை பிரதேசம் பிங்கா ஓயா பெருக்கெடுத்ததால் பெரிதும் பாதிக்கப்பட்ட அக்குறணை நகரில், வெள்ளப் பெருக்கு காரணமாக ஏற்பட்ட பொருட்சேதம் 300 கோடி ரூபாவைத் தாண்டுவதாக அக்குறணை பிரதேச செயலாளருக்கு வர்த்தக சமூகம் அறிவித்துள்ளது.இவ்வாறு ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக அம்பத்தென்ன முதல் அக்குறணை 7ம் மைல் கல் வரை சுமார் 340 வீடுகள் மற்றும் வியாபார நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக அக்குறணை பிரதேச செயலாளர் திருமதி இந்திகா அபேசிங்க தெரிவித்துள்ளார்.அம்பேதன்ன முதல் அக்குறணை 07 தபால் நிலையம் வரை புகையிரதத்திற்கு அருகில் 340 வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கு ஏற்பட்ட இழப்பை மதிப்பிடுவதற்கு அரசாங்கத்தால் ஐந்து குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பொல்கொல்லை நீர்த்தேக்கத்தின் மூலமாகவும் பிங்கா ஓயா மூலமாகவும் சேர்ந்திருக்கும் வண்டல் மண் காரணமாகவே, பிங்கா ஓயா ஊடாக வரும் நீரோடை நிரம்பி வழிவதற்கு முக்கிய காரணம் என இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இந்த வண்டல் மண்ணை விரைவில் அகற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக பிரதான மின்விநியோக கம்பம் சரிந்து வீழ்ந்து, நீர்விநியோகக் குழாய் வெடித்திருந்ததால், அக்குறணை நகரின் பல இடங்களில் நீர் மற்றும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டிருந்தது.நேற்று காலை திருத்தப் பணிகள் பூர்த்தியாகி, விநியோகம் சீர்செய்யப்பட்டிருக்கிறது. வெள்ளத்தால் சேறு படிந்த வீதிகளையும், கட்டடங்களையும் சுத்தப்படுத்தி வருவதாக அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் மொஹம்மட் இஸ்திஹார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement