• Mar 20 2025

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க உயர் படையதிகாரி

Chithra / Mar 20th 2025, 9:19 am
image

  

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைத் தளபதி  அட்மிரல் சாமுவேல் ஜே. பப்பாரோ, இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

தனது பயணத்தின் போது, ​​அட்மிரல் பப்பாரோ, இலங்கையின் மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் இராணுவத் தலைவர்களுடன் இணைந்து, நீடித்த அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்துவார் என்று தூதரகம் குறிப்பிடுள்ளது.

அத்துடன், இந்தோ - பசுபிக் பகுதியில் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கான அமெரிக்க தொலைநோக்குப் பார்வையையும் அவர் பகிர்ந்து கொள்வார்.

இந்த நிலையில், இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இந்தோ - பசுபிக் பகுதியில் பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்கும் அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை தளபதி பப்பாரோவின் வருகை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அமெரிக்க தூதரகம், அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க உயர் படையதிகாரி   அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைத் தளபதி  அட்மிரல் சாமுவேல் ஜே. பப்பாரோ, இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.தனது பயணத்தின் போது, ​​அட்மிரல் பப்பாரோ, இலங்கையின் மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் இராணுவத் தலைவர்களுடன் இணைந்து, நீடித்த அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்துவார் என்று தூதரகம் குறிப்பிடுள்ளது.அத்துடன், இந்தோ - பசுபிக் பகுதியில் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கான அமெரிக்க தொலைநோக்குப் பார்வையையும் அவர் பகிர்ந்து கொள்வார்.இந்த நிலையில், இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இந்தோ - பசுபிக் பகுதியில் பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்கும் அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை தளபதி பப்பாரோவின் வருகை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அமெரிக்க தூதரகம், அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement