பாடசாலை மாணவர்களுக்குக்கு தடுப்பூசி திட்டம்-அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

100

15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அடுத்த வாரத்திற்குள் மாணவர்களுக்கான கொவிட் தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான வைத்தியர் நளீந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தடுப்பூசி திட்டத்தைக் கண்காணிக்க ஒவ்வொரு கல்வி வலயத்திற்கும் குழந்தை நிபுணர் ஒருவரும் நியமிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தடுப்பூசித் திட்டத்தின் போது உள்ளார்ந்த நோய்கள் உள்ள சிறுவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், 15 முதல் 19 வயது வரை உள்ள பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

மேலும், 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி தொடர்பில் ஒரு தீர்மானம் எட்டப்படவில்லை என்றும், இது தொடர்பில் வல்லுநர்கள் தற்போது தரவுகளை ஆராய்ந்து வருவதுடன், அது குறித்து கலந்துரையாடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: