• Nov 22 2024

வடமராட்சி கல்வி வலய மாணவர் பாராளுமன்ற அமர்வு

Chithra / Nov 12th 2024, 3:40 pm
image


யாழ்ப்பாணம் வடமராட்சி கல்வி வலய மாணவர் பாராளுமன்ற அமர்வு நெல்லியடி மத்திய கல்லூரியில் வடமராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளரும்,  மாணவர் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான  ப.அருந்தவச்செல்வம் தலமையில் காலை 10:00 மணியளவில் கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

அதனை தொடர்ந்து வடமராட்சி கல்வி வலய மாணவர் பாராளுமன்றத்திற்கான சபாநாயகர் தெரிவு இடம் பெற்றது. 

சபாநாயகராக ஹாட்லிக் கல்லூரி மாணவன் சிவகணேசன் அனந்திகன் தெரிவு செய்யப்பட்டு, அமர்வுகள் இடம் பெற்றது.

மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரேரணைகளை மூன்வைத்ததை தொடர்ந்து அடுத்த அமர்வு திகதி தீர்மானிக்கப்பட்டு அமர்வு நிறைவுற்றது.

இதில்  பிரதம விருந்தினராக துணுக்காய் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்  நிறைஜா மயூரதாசன்,  சிறப்புவிருந்தினராக நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர்  திரு.கணேசரட்ணம் கிருஸ்ணகுமார், பிரதிக் கல்விப் ணிப்பாளர்கள்,  உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்,  கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள்,வலயத்திற்க்கு உட்பட்ட அதிபர்கள், ஆசிரியர்கள்,  மாணவர் பாராளுமன்ற பொறுப்பாசிரியர்கள்,  நெல்லியடி மத்திய கல்லூரி சமூகம், என பலரும் கலந்து கொண்டனர்.


வடமராட்சி கல்வி வலய மாணவர் பாராளுமன்ற அமர்வு யாழ்ப்பாணம் வடமராட்சி கல்வி வலய மாணவர் பாராளுமன்ற அமர்வு நெல்லியடி மத்திய கல்லூரியில் வடமராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளரும்,  மாணவர் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான  ப.அருந்தவச்செல்வம் தலமையில் காலை 10:00 மணியளவில் கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.அதனை தொடர்ந்து வடமராட்சி கல்வி வலய மாணவர் பாராளுமன்றத்திற்கான சபாநாயகர் தெரிவு இடம் பெற்றது. சபாநாயகராக ஹாட்லிக் கல்லூரி மாணவன் சிவகணேசன் அனந்திகன் தெரிவு செய்யப்பட்டு, அமர்வுகள் இடம் பெற்றது.மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரேரணைகளை மூன்வைத்ததை தொடர்ந்து அடுத்த அமர்வு திகதி தீர்மானிக்கப்பட்டு அமர்வு நிறைவுற்றது.இதில்  பிரதம விருந்தினராக துணுக்காய் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்  நிறைஜா மயூரதாசன்,  சிறப்புவிருந்தினராக நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர்  திரு.கணேசரட்ணம் கிருஸ்ணகுமார், பிரதிக் கல்விப் ணிப்பாளர்கள்,  உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்,  கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள்,வலயத்திற்க்கு உட்பட்ட அதிபர்கள், ஆசிரியர்கள்,  மாணவர் பாராளுமன்ற பொறுப்பாசிரியர்கள்,  நெல்லியடி மத்திய கல்லூரி சமூகம், என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement